Header Ads



"புற்று நோயும் நாமும்" நூல் வெளியிடு


(பி.எம்.எம்.ஏ. காதர்)

தாதி உத்தியோகத்தர் சாமஸ்ரீ தேசகீர்த்தி எம்.சி.எம்.சி.கமறுற் றிழா எழுதிய "புற்று நோயும் நாமும்" நூல் வெளியீட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (06) சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற்றது.   சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார், 

நூல் வெளியீட்டு விழாவில் டாக்டர் யூ.எல்.ஷராப்தீன் நூலின் அறிமுக உரையையும் கிழக்குப் பல்கலைக்கழக் விரிவுரையாளர் கலாநிதி அருட் சகோதரி ஜே.ஜோஸப் சிறப்புரையையும் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் றியாத் ஏ.மஜீத் நூல் வெளியீட்டுரையையும் நிகழ்த்தினர்.சாய்ந்தமருது தௌவா இஸ்லாமிய கலா பீட முதல்வரும் ஓய்வு பெற்ற பிரதி அதிபருமான மௌலவி யூ.எல்.எம்.காஸிம் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.    அத்துடன் சாய்ந்தமருது உலமா சபைத் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் என்.எம்.முஜீப், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.றிஸான் ஆகியோர் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு நூலின் விசேட பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசால அபிவிருத்திச் சபை உறுப்பினர் ஏ.எல்.ஆப்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.




1 comment:

  1. it is a good attempt and excellent piece of writing on cancer and We.

    My best complement mr Rila

    ReplyDelete

Powered by Blogger.