நைரோபியி விமான நிலையத்தின் கொழுந்து விட்டு எரியத் தொடங்கிய தீ
கிழக்கு ஆப்பிரிக்காவில் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையங்களில் கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையமும் ஒன்று. அங்கு இன்று காலை ஐந்து மணியளவில் விமான நிலையத்தின் இமிக்ரேசன் பிரிவின் அருகே திடீரென தீப்பிடித்தது.
கொழுந்து விட்டு எரியத் தொடங்கிய தீ அருகில் இருந்த சர்வதேச பயணிகள் வருகை பிரிவிலும் பரவ ஆரம்பித்தது. இதனால் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
எந்தவொரு பயணிகள் விமானமும் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் அனுமதிக்கப்படவில்லை. அவசர நிலையில் இறங்கும் விமானங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
இந்த சம்பவத்திற்கு இரு தினங்கள் முன்னர்தான், விமானங்களுக்கு எரிபொருள் செல்லும் குழாயில் ஏற்பட்ட பிரச்சினையால் விமானப் பயணங்களில் அதிக காலதாமதம் ஏற்பட்டது. இதனால், சில விமானங்கள் கடற்கரை நகரமான மொம்பாசா விமான நிலையம், உகாண்டாவின் என்டபே சர்வதேச விமான நிலையம், ருவாண்டாவின் கிகாலி சர்வதேச விமான நிலையம் போன்றவற்றிற்கு திருப்பி விடப்பட்டன என்ற தகவலும் வெளியிடப்பட்டது.
Post a Comment