Header Ads



பௌத்த பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க இறுதிச் சந்தர்ப்பம் - ஹிஸ்புல்லாஹ்

(இப்னு ஜமால்தீன்)

அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக சில பௌத்த பேரீனவாதிகள் பாசிச செயற்பாடுகளை முடக்கிவிட்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மதப் பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பம் வட முஸ்லிம்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 
நேற்று 2013-08-29 கற்பிட்டி அல் மனார் முகாமில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவர் மேலும் உரையாற்றிய போது

வடக்கு முஸ்லிம்கள் 20 வருடங்களாக இன்னல்களையே சுமந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்குவதிலும் அவர்களை மீள் குடியேற்றுவதிலும்   பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

எனினும் இத்தடைகளை உடைத்து வடக்கு முஸ்லிம்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனையும், அவரது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினைரையும் இனவாதிகள் என்று தமிழ்த் தேசியவாதிகள் தூசிக்கின்றனர். இது போதாது என்று தற்போது நமது முஸ்லிம் காங்கிரசும் தமிழ்த் தேசிய வாதிகளுடன் இணைந்து எதிராக பிரச்சாரம் செய்வது வடக்கு முஸ்லிம்களின் எதிர்காலத்தையே பாதிப்பதாக உள்ளது. வரலாற்றிலிருந்தும் கடந்தகால அனுபங்களிலுந்தும் நாம் பாடங்களை கற்கவேண்டியிருக்கின்றன. வுரலாற்றிலிருந்து பாடம் கற்கா விட்டால் நாம் அரசியல் அநாதைகளாக மாறிவிடுவோம்.

 கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதனால் வடக்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட  பாதிப்பு என்ன வென்று முஸ்லிம் காங்கிரஸ் அறிந்திருந்தும் அறியாதவர்களாக செயற்படுகின்றனர். தமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் குறுடாக வேண்டும் என்றுதான் இன்று தனியாக போட்டியிடுகின்றனர். தனித்து போட்டியிடுவதனால் ஏற்பட்ட பாதிப்பை நான் இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். மாந்தை பிதேச சபையில்
த.தே.கூட்டமைப்பு -3800 வாக்குகள்
அ.இ.ம.காங்கிரஸ்  - 3500 வாக்குகள்
மு.காங்கிரஸ்       -1500  வாக்குகளை பெற்றனர். இங்கு த.தே.கூட்டமைப்பை விட 300 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இப் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பறி கொடுத்தோம்.

அதுபோலதான் நாச்சிக்குடா பிரதேச சபையை
த.தே.கூட்டமைப்பு -3996 வாக்குகள்
அ.இ.ம.காங்கிரஸ்  - 3870 வாக்குகள்
மு.காங்கிரஸ்       -153  வாக்குகளை பெற்றனர். 

இங்கு த.தே.கூட்டமைப்பை விட 126 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இப் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பறி கொடுத்தோம். இவ்வாறு தான் மன்னார் பிரதேச சபையை 400 வாக்குகளால் பறிகொடுத்தோம். இப்பிரதேச சபைகளை முஸ்லிம் காங்கிரசும் கைப்பற்றவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் கைப்பற்ற விடவில்லை.

இன்று இப்பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் நிலை என்ன வென்று இவர்களுக்கு தெரியாது. ஒரு பௌசர் தண்ணீரைப் பெறுவதற்கு கூட இப்பிரதேச சபைகளிடம் பிச்சைக்காரர்கள் போல் அலைய வேண்டியுள்ளது. இது தான் வடக்கு முஸ்லிம்களின் யதார்த்த நிலை.

இந்த மக்களின் துன்பங்கள் தெரிந்திருந்தும் அவற்றை நிறைவேற்றுவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்யாமல் மீண்டும் மீண்டும் வடக்கு முஸ்லிம்களை படுகுழியில் தள்ளிவிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியவாதிகளுடன் கைகோர்த்துள்ளது.

வடக்கிற்கு வெளியில் உள்ள முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருக்கும் எங்களைப் பார்த்து நாட்டில் பள்ளிகள் உடைக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் நசுக்கப்படுகின்றனர் இந்த முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கின்றனர்.நாங்கள் அரசாங்கத்துடன் சுகபோகங்களுக்காக ஒட்டிக் கொண்டிருப்பதாக இம்மக்கள் கூறுகின்றனர்.

ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் வடக்கிலிருந்து துரத்தப்பட்ட இம்முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தற்போதுதான் அமைச்சர் றிசாதினால் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஆத்திரத்துடன் எடுக்கும் முடிவுகள் நாட்டில் உள்ள முழு முஸ்லிம்களையும் பாதிக்கும். குறிப்பாக வடக்கு முஸ்லிம்களை மீண்டும் அகதி வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுவிடும். இவ்வாறான பிரச்சினைகளைக் கொண்டுள்ள நாம் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் எம்மால் பெறப்படும் முடிவுகள் இப்பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.பௌத்த பேரீனவாதத்தின் செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும்.

வடக்கு முஸ்லிம்களின் தேர்தல் ஆணையைக் கொண்டு நாங்கள் உரியவரிடம் பேசுவோம்.  பௌத்த பேரீனவாதிகளின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு மத்தியில் நம்பிக்கையுடன் முஸ்லிம்கள் அராங்கத்திற்கு வாக்களித்துள்ளனர் என்பதையும் முஸ்லிம்களின் நம்பிக்கையை காப்பாற்றுமாறும் நாங்கள் உரயவர்களிடம் கோருவோம். அப்போதும் பௌத்த பேரீனச் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லையாயின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆக்கபூர்வமான நடவடிக்கையை  இச்சமுகத்திற்காக எடுக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான எம்.எல்.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

7 comments:

  1. are there no limits for political lies and cheats?

    ReplyDelete
  2. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலம் பௌத்த பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க முடியுமாம்!
    கடந்த காலங்களில் நீங்களும் உங்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பௌத்த பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்கிய இலட்சணம் தெரியாமல்தான் கிடக்கிறது....
    மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களைத்தான் இவர் மடையர்கள் என நினைக்கிறார் என்றால் இல்லை வடக்கு முஸ்லிம் வாக்காளர்களையும் அப்படித்தான் எடை போட்டுள்ளார்.

    ReplyDelete
  3. என்ன பிரதியமைச்சரே! கிழக்கில் மக்களை ஏமாற்றி முடித்து விட்டு இப்போது வடக்கிலுமா..? எப்படி அது..?

    பௌத்த தீவிரவாதிகளை விரட்டியடிக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டுமா..?

    முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வளவு அநியாயங்களையும் செய்யும் பௌத்த தீவிரவாதிகளை இந்த அரசாங்கம்தான் போஷித்து பாது காத்து வருகின்றது.
    இது ஒரு சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம். இது வரை முஸ்லிம்களுக்கு எதிரான 227 இனவாத சம்பவங்கள் நடந்துள்ளன. 25 பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றுக்காவது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.

    அது சரி..! மஹியங்கனைப் பள்ளிவாயல் மூடப்பட்ட பிறகு உடனடியாக ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் கேட்டீர்களே.. கிடைத்ததா..?

    உங்களை சந்திக்க விரும்பாத ஜனாதிபதி மஹியங்கனையில் வேடுவர் கூட்டத் தலைவரை சந்தித்தாரே.! தெரியுமா உங்களுக்கு..?

    ஆக, வேடுவர்களுக்கு இருக்கும் மரியாதை கூட உங்களுக்கு ஜனாதிபதி தரவில்லை என்பது இன்னும் புரியவில்லையா..?

    இந்த லட்சனத்தில் வட மாகாண முஸ்லிம்களும் உங்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தால்தான் பௌத்த இனவாதிகளை விரட்டியடிக்க முடியும் என்று சொல்கின்றீர்களே வெட்கமாக இல்லையா..?
    நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உள்ளு}ராட்சி மன்றத் தேர்தல் என அத்தனை தேர்தல்களிலும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று இந்த அரசாங்கத்தின் காலடியில் கொண்டு போய்க் கொட்டினீர்களே..!
    இதற்கெல்லாம் நன்றியுணர்வோடு நடக்காத இந்த அரசாங்கம் வடக்கு முஸ்லிம்களின் சொற்ப வாக்குகளையும் பெற்றால்தான் பௌத்த இனவாதிகளை விரட்டியடிக்க முடியும் என்று சொல்கின்றீர்களே வெட்கமாக இல்லையா..?

    உங்களைப் போன்றவர்களுக்கு இத்தனை வாழ்க்கை வசதிகளையும் வாரி வழங்கிவிட்டு பலவருடங்களாக வாழ வழி தெரியாமல் தவிக்கும் வட மாகாண முஸ்லிம்களை நீங்கள் குறைந்த பட்சம் முட்டாள்கள் என நினைக்காமல் இருந்தால் அதுவே போதும்.

    ReplyDelete
  4. Ivanuhal ellam BBS Pangalarhal , Kattankudil office open panna kooppittavanalam ippo thaththuva pesuran ,,,,,,,

    ReplyDelete
  5. இப்ப தான் உங்களுக்கு இந்த அறிவு வந்தது போல, இல்ல இப்ப தான் election வந்ததா....? எப்படி sir உங்களால் இப்படி வெட்கம் இல்லாமல் தொடர்ந்து பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முடியும்?

    இதில் யன்ன புதினம் என்றால் நீங்கள் அள்ளி விடும் அத்துனை வாய் சவடால்களை நம்புவதற்கு இன்னமும் ஒரு கூடம் இரிகதான் செய்கிறது...so sad, waiting for the truth and faithful leader

    ReplyDelete
  6. very funny... Mr. Hisbullah, This is not Kaththankudy

    ReplyDelete
  7. ஆமா இவர் இலங்கையிலா இருக்காரூ? சொல்லவே இல்ல? ஆ.. ஊ.. ன்ன மாநாடுன்னு கேளபிர்ரனுக..........

    ReplyDelete

Powered by Blogger.