Header Ads



யாழ்ப்பாணத்தில் 'பசுபிக் ஏஞ்சல்' என்ற பெயரில் இலங்கை - அமெரிக்கா கூட்டுப் பயிற்சி

அமெரிக்காவின் பசுபிக் விமானப்படையும், சிறிலங்கா விமானப்படையும் இணைந்து, யாழ்.குடாநாட்டில், ‘பசுபிக் ஏஞ்சல் பயிற்சி‘ என்ற கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன.  நேற்று ஆரம்பமான இந்தப் பயிற்சி வரும் 10ம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது. 

இந்தப் பயிற்சி, மருத்துவ முகாம்களை நடத்துதல், திருத்தியமைத்தல் திட்டம் என்று இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகிறது.  மருத்துவமுகாம் அல்வாய் வடக்கு, அச்செழு கிராமங்களில் நடத்தப்படுகிறது. 

திருத்தியமைக்கும் திட்டம், பிரதானமாக பாடசாலைகளை திருத்துதல் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. 

புன்னாலைக்கட்டுவன் ஆரம்பப் பாடசாலை, குட்டியப்புலம் கலவன் பாடசாலை, அச்செழு சிவப்பிரகாச வித்தியாலயம் ஆகியவை இந்தத் திட்டத்தின்கீழ் அமெரிக்க, சிறிலங்கா விமானப்படை பொறியாளர்களால் திருத்தியமைக்கப்படவுள்ளன. 

சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படையுடன், அமெரிக்கா தொடர்ச்சியாக மனிதாபிமான மற்றும், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டுப் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.