கல்முனை மேயரே, சுகாதார பரிசோதகர்களே இது உங்களின் கவனத்திற்கு (படங்கள்)
(ஏ.எல்.ஜுனைதீன்)
இப் புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்ட காட்சிகள் என உங்களால் கண்டு பிடிக்க முடிகின்றதா? சாய்ந்தமருதை அடுத்துள்ள குடியேற்றக் கிராமமான பொலிவேரியன் கிராமத்தை அடுத்துள்ள ஒரு இடத்தில் மாடுகளை உணவுக்காக அறுக்கும் இடத்தின் காட்சிதான் இது. தனிப்பட்ட நபரால் நடத்தப்படுகின்றது எனவும் அங்கு கூறப்பட்டது.
கடந்த 2013.08.30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இப்படம் எடுக்கப்பட்டது. அன்றைய தினம் மட்டும் இவ்விடத்தில் 46 மாடுகள் அறுக்கப்பட்டதாக அங்கிருக்கும் முஅதீன் எனக் கூறிக் கொள்ளும் நபர் ஒருவர் தகவல் தந்தார். சாய்ந்தமருது, கல்முனைக்குடி ஆகிய இரண்டு ஊர்களுக்குமே இவ்வாறு இறைச்சி விற்பனை செய்வதற்காக அன்று இவ்விடத்தில் இத் தொகை மாடுகள் அறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். சுகாதார பரிசோதகர்கள் இங்கு வருவார்களா? எனக் கேட்டபோது வருவதாகவும் கூறினார். ஆனால், அங்கு எந்த சுகாதாரப் பரிசோதகர்களையும் காணக் கிடைக்கவில்லை. இப் பிரதேச சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்காக இப்படங்களைத் தருகின்றோம்.
இச் செய்தியையும் புகைப்படத்தையும் கண்ணுற்ற இந்த மாடுகள் அறுக்கும் தொழுவத்தின் உரிமையாளர் என்னோடு அன்பாகப் பேசி இது சம்மந்தமான சில விளக்கங்களைத் தந்தார். இவ்விடத்திற்கு சுகாதாரப் பரிசோதகர்கள் வருவதில்லை. மிருக வைத்தியர்கள்தான் வருவதாகக் கூறினார்.
ReplyDeleteஇப்புகைப்படங்கள் எடுக்கும் நேரத்தில் அவர்கள் போய் இருக்கக்கூடும் என்றார்.முஅதீனுக்கு எங்களால் அடையாள அட்டை வழங்க முடியாதே என்றார். அடுத்து இவ்விடம் அன்றாடம் துப்பரவு செய்யப்பட்டு விடும் என்றார். தனிப்பட்ட ஒருவரினால் செய்யப்படும் இப்படியான இவ் வேலைத் திட்டத்தை இச் செய்தியில் பாராட்டவில்லையே என்றும் கூறினார்.
உண்மையில் இவரின் இந்த சேவை பாராட்டுக்குரியதுதான்.கட்டடத்தை பாரிய அளவில் கட்டி மாபிள் கற்களும் ஒட்டியுள்ளார்.மாநகர சபை செய்ய வேண்டிய இச் சேவையை இவர் செய்து வருகின்றார்.
இவரின் இச் சேவைக்கு சுகாதார உத்தியோகத்தர்களின் கண்காணிப்பு , ஒத்துழைப்பு கூடுதலாக வழங்கப்படல் வேண்டும்.அன்றாடம் இவ்விடம் சீக்கிரமாக சுத்தமாக்கப்படல் வேண்டும் என்பது மக்களின் விருப்பமாகும்
- ஏ.எல்.ஜுனைதீன்.