Header Ads



சூடான் நாட்டின் இராணுவப் பிரதிநிதிகள் இலங்கையில்


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சூடான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் அப்துல் ரஹ்மான் மொஹமட் செயின் அஹமட் தலைமையிலான அந்நாட்டின் இராணுவப் பிரதிநிதிகள் , விமானப்படை தலைமையகத்தில் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மாஷல் எச்.டி. அபேவிக்ரமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் சுருக்கமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. சந்திப்பின் முடிவில் இலங்கை விமானப்படைத் தளபதி நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

மேலும், சூடானிய பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான குழுவினர் நேற்று இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்னாயக்கவை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து, கலந்துரையாடியுள்ளனர்.

No comments

Powered by Blogger.