நுாற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் தீர்க்கதரிசனமற்ற முடிவுகளால் இந்த நாட்டு மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும்,தொடர்ந்தும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுவதில் அர்த்தமில்லையென தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆலங்குடா அரபா நகர் பிரதேச அமைப்பாளர் கஸ்ஸாலி அதாவுல்லா தலைமையிலான நுாற்றுக்கணக்கான ஆதரவாளர்கள்,அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.
வடமாகாண சபை தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி உறுதிப்படத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் இன்று அணி அணியாக ஆளும் கட்சியில் இணைவதில் தாம் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது தெரிவித்தார்.
R & H both are same
ReplyDeleteakkaraikku ikkara pachcha.
ReplyDelete