Header Ads



கல்முனைக்குடியில் இப்படியும் நடைபெறுகிறது..!

இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சைக்குத் தோற்றுபவர்களுக்கான கருத்தரங்கொன்றினை தனி நபர்கள் சிலர் ஏற்பாடு செய்துள்ளனர். இன்று  சனி மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இந்த கருத்தரங்கு கல்முனைக்குடியில் நடைபெறவுள்ளதாகவும், கருத்தருங்கிற்கான கட்டணம் 1300 ரூபாய் எனவும் குறுந்தகவல் சேவையொன்றினூடாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

மேற்படி கருந்தரங்கு துறைசார் வல்லுநர்களால் (Expert) நடத்தப்படவுள்ளதாக மேற்படி விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் - குறித்த வல்லுநர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

விளம்பரத்தைக் கண்ணுற்ற நபரொருவர் - மேற்படி கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு விரும்பியுள்ளார். ஆயினும், கருத்தரங்கினை நடத்துபவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள அவர் ஆர்வம் கொண்டார்.

எனவே, குறித்த விளம்பரத்தில் இருந்த கையடக்கத் தொலைபேசியுடன் தொடர்பு கொண்டார். மறுமுனையில் ஆண் ஒருவர் பதிலளித்திருக்கின்றார்.

அதன்போது நடந்த உரையாடல் இது:

'இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சைக்குத் தோற்றுபவர்களுக்கான கருத்தரங்கொன்று நடைபெறவுள்ளதாக விளம்பரம் பார்த்தேன். யாரால் நடத்தப்படவுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியுமா?'

'துறைசார் வல்லுநர்களால் (Expert) நடத்தப்படும்'.

'அவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியுமா?'

'ஆமாம், அவர்கள் இந்தத் துறையில் வல்லுநர்கள். நிறைய கருத்தரங்குகளை நடத்தியுள்ளனர்'.

அதுசரி, அவர்கள் பெயர்களைத் தெரிந்து கொண்டால்தானே – நாங்கள் கருத்தரங்கில் கலந்து கொள்வதா, இல்லையா என்று தீர்மானிக்க முடியும்' என்று கேட்ட போது...

'நீயெல்லாம், பரீட்சை எழுதி சித்தியடைய மாட்டாய்' என்று கூறி, கருத்தரங்கு ஏற்பாட்டாளர் தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார்.

உண்மையில், இன்று கல்வியின் பெயரால் பலர் மோசடியாக பணம் உழைத்துக் கொண்டு வருகின்றனர். ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்பவர், அந்தக் கருத்தரங்கு யாரால் நடத்தப்படவுள்ளது என்பதை தெரிந்து கொள்ளக் கூட முடியாமலுள்ளமை கவலையளிக்கும் விடயமாகும். விபரம் கேட்டால் திட்டுகிறார்கள். என்று கவலையுடன் கூறினார் பாதிக்கப்பட்ட நபர்.

கருத்தரங்கு என்கிற பெயரில் 1300 ரூபாய் பணத்தினை கட்டணமாக வசூலிப்பவர்கள் - பங்குபற்றுநர்களுக்கு உரிய தகவல்களை வழங்க வேண்டியது கடமையல்லவா?

துறைசார் நிபுணர்களால் கருத்தரங்குகள் நடத்தப்படும் என்று விளம்பரம் செய்து, பங்குபற்றுநர்களிடம் பணத்தை அறிவிட்டுக் கொண்டு, கடைசியில் ஊர் - பேர் தெரியாதவர்களை வைத்து கருத்தங்குகளை நடத்தும் ஏமாற்று நடவடிக்கைகள் பரவலாக நடைபெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.