பங்களாதேஷில் 'சூபி' தாரிகத் தொடர்ந்த வழக்கில் 'ஜமாத் இ இஸ்லாமி' கட்சிக்கு தடை
வங்கதேசத்தின், தடை செய்யப்பட்ட, , "ஜமாத் -இ- இஸ்லாமி' கட்சியின் மேல் முறையீட்டு மனுவை, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. வங்கதேசத்தில், முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாக, "ஜமாத் -இ- இஸ்லாமி' இருந்தது. இதற்கிடையே, மதச்சார்பின்மையை ஊக்குவிக்கும், "சூபி' தத்துவத்தை பின்பற்றும், "தாரிகத்' அமைப்பு, 2009ல், தாகா உயர் நீதிமன்றத்தில், "ஜமாத் -இ- இஸ்லாமி' கட்சிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. "வங்கதேசத்தின் சுதந்திரத்திலும், நாட்டின் இறையாண்மையிலும் நம்பிக்கை இல்லாத, "ஜமாத் -இ- இஸ்லாமி' கட்சியைத் தடை செய்ய வேண்டும்' என, தாரிகத் அமைப்பின் பொதுச் செயலர், ரசூல் ஹக் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மதச்சார்பற்ற வங்கதேசத்தில், மதவாதத்தைத் தூண்டும் விதத்தில் செயல்படும், "ஜமாத் -இ- இஸ்லாமி' கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக, தீர்ப்பளித்தது.
இதையடுத்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் பொதுத் தேர்தலில், இந்தக் கட்சி போட்டியிடும் தகுதியை இழந்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, இக்கட்சியின் தலைவர்கள், மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை, சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்து விட்டது.
Post a Comment