தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு
ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று புதன் மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள ஹமீதிய்யா மத்ரஸா மண்டபத்தில் நடைபெறும்.
உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஸாவியா தக்கியா மற்றும் மேமன் ஹனபிப் பள்ளி வாசல் ஷரீஆ கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இன்று புதன் மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 6.29 மணி முதல் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையைப் பார்க்குமாறும் தலைப்பிறை கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் நேரிலோ அல்லது 011 5234044, 2432110, 0112 2390783, 0777 366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாகவோ அறியத் தருமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கின்றது.
Post a Comment