Header Ads



மெக்சிகோ நீதிமன்றத்தில் இப்படியும் நடந்தது

ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது திடீரென எழுந்த நீதிபதி ஒருவர் நீதிமன்றதிலேயே மற்றொரு நீதிபதியை அடித்து நொறுக்கினார்.

 மெக்சிகோ நாட்டின், மோர்லோஸ் நகரில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, மைக்கேல் ஏஞ்சல் பால்கன். இதே நீதிமன்றத்தில் பணிபுரியும் மற்றொரு நீதிபதி, ரூபன் ஜாசோ. ஒரு முக்கிய வழக்கினை இந்த இரு நீதிபதிகளும் சேர்ந்து விசாரித்து கொண்டிருந்தனர்.

வழக்கு விசாரணை நேரத்தின்போது சக நீதிபதியான ரூபன் ஜாசோவின் செய்கைகள், மைக்கேலுக்கு பிடிக்கவில்லை. முதலில் ஜாசோவை, கடுஞ்சொல்லால் திட்டினார். அதை தொடர்ந்து மைக்கேல், ஜாசோ மீது பாய்ந்து, அவரை கடுமையாக தாக்கினார். நீதிமன்றத்தில் அனைவரது முன்னிலையில் நடந்த இந்த சம்பவம்  அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பு நிதானத்திற்கு வந்த மைக்கேல், தன்னுடைய செய்கைக்காக, நீதிமன்றத்தில் இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.  மூத்த நீதிபதி மைக்கேல், அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக, அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

No comments

Powered by Blogger.