மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடுசெய்ய தொலைபேசி இல அறிமுகம்
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யக் கூடிய வகையில் இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அவசரமாக முறைப்பாடு செய்ய வேண்டியிருந்தால் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணைக்குழு இலங்கையில் 1996ம் ஆண்டு நிறுவப்பட்ட காரணத்தினால் அவசர அழைப்பு இலக்கமாக 1996 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. gtn
Post a Comment