அடையாளம் காண்பதற்காக புர்காவை நீக்க சொன்ன பிரிட்டிஷ் நீதிமன்றம்
இங்கிலாந்தின் பிளாக்பிரையர்ஸ் கிரவுன் கோர்ட்டில் வியாழன் அன்று ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றது. அதில் 21 வயது நிரம்பிய முஸ்லிம் பெண் ஒருவர் பிரதிவாதியாக நீதிமன்றத்தில் ஆஜரானபோது, அவரது மத வழக்கப்படி, பர்தா அணிந்து வந்திருந்தார்.
வழக்கை விசாரிக்க வந்திருந்த நீதிபதி பீட்டர் மர்பி வெளிப்படையான நீதிக் கொள்கைக்கு, பிரதிவாதி யாரென்பது நீதிமன்றத்திற்குத் தெரியவேண்டும். பர்தா அணிந்து வந்ததினால் அவரது கண்கள் மட்டுமே வெளியே தெரிந்ததால், அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தத் தனது முகத்தைக் காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
இல்லையெனில் யார் வேண்டுமானாலும் அவரைப்போல் இங்கு ஆஜராக இயலும். நீதிமன்றத்திற்கு வெளியே அவர் தமது விருப்பபடி உடை அணிவதற்கு பூரண உரிமைகள் உண்டு என்றபோதிலும், நீதிவிசாரணையின்போது நீதி நலன்களே முதன்மையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயினும், ஹாக்னேயிலிருந்து வந்திருந்த அந்தப் பெண் முஸ்லிம் என்பதால், மற்ற ஆண்கள் முன்னால் முகத்திரையை விலக்கமுடியாது என்றும், சட்ட காரணங்களுக்காக அவரது அடையாளத்தை வெளிப்படுத்த முடியாது என்று பத்திரிகை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
unmayana muslim allahwukku viruppamana muslim ini ellorum appadi irukka muyatchippoma?
ReplyDeleteallahu akbar
ReplyDeletemuslim mathatthil kaddayam mukaththai moodavenrum enru sollavillai enru muslimkalee solkirarkalee kulabbmaka ullathu
ReplyDeletemmm, some time ithu veara prmblms'a kondu varalaam.. So sila idankal'la nehilnthu poara theava irukkirathu..
ReplyDelete