லைபீரியாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்
லைபீரியா பல்கலைக்கழக நுழைவு தேர்வில் 25 ஆயிரம் மாணவர்கள் தோல்வியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்கா லைபீரியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அடிப்படை ஆங்கில திறமை இல்லாததால் மாணவர்களால் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் அனைவரும் தோல்வியடைந்ததாக பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லைபீரியா அதிபர் எல்லன் ஜான்சன் சிர்லிப் கூறுகையில், நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில் இதுவரை கல்வி முறையில் குழப்பம் உள்ளதால் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் லைபீரியா கல்வி அமைச்சர் எமோனியா டேவிட் டார்பெக் பல்கலைக்கழக அதிகாரிகளை சந்தித்து பேசினார். பல்கலை நுழைவு தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment