Header Ads



மனித உரிமை நிறுவனங்கள் இலங்கையை இன்னல்களுக்கு உள்ளாக்குகிறது - மஹிந்த

பல்வேறுப்பட்ட தரப்பினரின் தேவைக்கு அமைய ஐக்கிய நாடுகளின் மனித உரிமை போன்ற நிறுவனங்கள் இலங்கை மற்றும் பெலரூஸ் ஆகிய நாடுகளை இன்னல்களுக்கு உள்ளாக்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெலரூஸ் ஜனாதிபதி எலக்ஸ்சேன்டர் லுகசென்கோவை சந்தித்து உரையாடிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிறிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மனித உரிமை சபையை பயன்படுத்துவதை வன்மையாக கண்டிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய, பெலரூஸ் ஜனாதிபதி சமூகத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கைளை தமது அரசாங்கம் பின்பற்றுவதாக தெரிவித்தார்.

இதற்கமைய, இலங்கையுடன் வர்த்தக, பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்புக்கள் என்பனவற்றை விஸ்தரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதனிடையே, இரண்டு நாடுகளுக்கிடையேயான ஏழு முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்தானதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. அதில் ஒரு ஒப்பந்தம் எங்களுக்கு கடன் தாருங்கள் என்பதுதானே. செத்த பிணத்தின் நெற்றியில் உள்ள நாணயத்தைக்கூட விட்டு வைக்காதவர்கள்தான் இவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.