பெலாரஸ் சென்றடைந்தார் ஜனாதிபதி மஹிந்த (படங்கள்)
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸிற்கு சென்றடைந்தார். பெலாரஸின் மின்ஸ்க் தேசிய விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை- அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் வெலாத்மிர் மகாய் வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது- பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சான்டர் லுகஷென்கோ மற்றும் பிரதமர் பேராசிரியர் மிஹாயில் மியஸ்னிகோவிச் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவூள்ளனர்.
பெலாரசில் நடைபெறவுள்ள வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியுடன் இலங்கை வர்த்தக குழுவொன்றும் இந்த விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதியும்- பெலாரஸ் பிரதமரும் உரைநிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுற்றுலாத்துறை ஒன்றிய மாநாட்டிலும் கலந்துகொள்ளும் ஜனாதிபதி- மின்ஸ்க் நகரிலுள்ள வாகன உற்பத்தி நிலையமொன்றையும் பார்வையிடுவார்.
Post a Comment