சிரியாவில் போர் அபாயம் - தனது நாட்டவர்களை திருப்பியழைக்கிறது ரஷ்யா
சிரியா நாட்டின் மீது அமெரிக்கா, தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதால், அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை ரஷ்யா வெளியேற்றி வருகிறது.
சிரியா நாட்டில், அதிபர் பஷர்-அல்-ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும் படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ரசாயன ஆயுதம்:
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும் படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத சப்ளை செய்து வருகின்றன. இதனால், சிரியாவில், தொடர்ந்து, சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில், 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 7 லட்சம் பேர், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியா நாட்டுக்கு, ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள், ஆதரவளித்து வருகின்றன. சிரியா ராணுவத்துக்கு, ரஷ்யா, நவீன ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது. இதனால், சிரியாவுக்கு எதிராக, ஐ.நா., பாதுகாப்பு சபையில் ஒரு மனதாக தீர்மானம் கொண்டு வர இயலவில்லை. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் தேதி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டனர். ரசாயன குண்டு வீச்சில், நச்சு புகை பரவி, 1,300 பேர் கொல்லப்பட்டதாக கூறும் இடத்தை, ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை ரசாயன குண்டு பயன்படுத்தியதற்கான தடயம் கிடைக்கவில்லை. ஆனால், ரசாயன குண்டை, சிரியா பயன்படுத்தியதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சரும், துணை அதிபர் ஜோபிடேனும் கூறுகின்றனர். அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் சிரியா மீது, தாக்குதல் நடத்துவது குறித்து, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன், ஆலோசித்து வருகிறார்.
அமெரிக்கா ஆலோசனை:
"சிரியா மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதால், சிரியாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களை, ரஷ்யா வெளியேற்றி வருகிறது. இதற்காக, இரண்டு சிறப்பு விமானங்களை அனுப்பி, தங்கள் மக்களை தாயகம் திரும்ப செய்கிறது. சிரியாவிலிருந்து, நேற்று, 116 பேர், ரஷ்யா திரும்பினர். சிரியாவில் ஆய்வு மேற்கொண்டுள்ள, ஐ.நா., சிறப்பு பிரதிநிதி, லக்தர் பிரஹிமி குறிப்பிடுகையில், ""சிரியாவில், சில வகை ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால் தான், கடந்த, 21ம் தேதி, ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் இதற்கான தடயங்கள் இன்னும் கிடைக்கவில்லை. சிரியா மீது தாக்குதல் நடத்த, ஐ.நா.,பாதுகாப்பு சபையின் ஒப்புதலை, அமெரிக்கா பெற வேண்டும்,'' என்றார். ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் சிரியா மீது, நடவடிக்கை எடுக்கும்படி கோரும் தீர்மானத்தை, பிரிட்டன், ஐ.நா.,பாதுகாப்பு சபையில், நேற்று தாக்கல் செய்தது. இது தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூனுடன், தொலைபேசியில் விவாதித்தார்.
ஈராக்கிற்கும் பலஸ்தீனுக்கும்,பாகிஸ்தானுக்கும்,சிரியாவுக்கும்: அமெரிக்காவும் பிரித்தானியாவும் போர்மூலம் ஒரு தீர்வைக்காணமுடியுமென்ற எண்ணம் அடிமுட்டாள்தனமானதும் தன் கீழ்த்தரமானதும் மறைவான தமது குறிக்கோள்களை சமப்படுத்திக்கொள்வதற்காகவும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள். பிரச்சினைக்கு தீர்வு போர்தானா?
ReplyDeleteஇம்முறை அமெரிக்கா சிரியாவின்மீது கைவைக்குமானால் இது பாரியதொரு யுத்தமாக மாறுவதன்மூலம் இத்துடன் அமெரிக்காவின் ஆட்டம் முடியும் நிலைக்கும் கண்டிப்பாக ஒரு சந்தர்ப்பத்தை அமெரிக்காவே தன்மேல் துக்கிப்போடும் நிலைக்கு ஆக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.