புல்மோட்டை முஸ்லிம்களின் காணிகளை சூறையாடும் நடவடிக்கை தொடருகிறது..!
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்குற்பட்ட புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராம சேவையாளர்களுக்கும் 23.08.2013ஆம் திகதியிடப்பட்டு பிரதேச செயலாளர் ஏ.உமாமகேஸ்வரனால் ' புல்மோட்டை பிரதேச தொல்பொருள் மற்றும் பூஜா பூமி தொடர்பான காணிக் கோரிக்கை முன்வைத்தல் தொடர்பாக ' என்ற தலைப்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் புல்மோட்டைப் பகுதியில் உள்ள அரசாங்க காணிகள் மற்றும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த அனுமதிப்பத்திரமுள்ள, உறுதியுள்ள காணிகளை அபிவிருத்தி செய்வதையும் கட்டிடங்கள் கட்டுவதையும் உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான உத்தரவு கடிதம் மக்களிடம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக குறிப்பிட்ட பிரதேசக் காணிகள் முறைகேடான வகையில் பலகாரணங்களைக் காட்டி அளக்கப்பட்டு அபகரிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த உண்மையாகும.
இவ்விடயம் பிரதேச சமூக ஆர்வளர்கள் சமூக அமைப்புகள் அரசியல் பிரமுகர்களான மாகாண சபை உறுப்பினர் ஆர் எம் அன்வர், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் எம்.முபாரக், பிரதி தவிசாளர் ஆதம்பாவா தௌபீக், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களால் இப்பிரச்சனை தீர்ப்பதற்கு பலத்த பிரயத்தனம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையிலே இவ்வாறான அறிவுறுத்தல் கடிதங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றது. எனவே இதன் காரணமாக பிரதேச அமைப்புக்கள் சமூக சேவை முன்னோடிகள் பிரதேச அரசியல் பிரமுகர்களால் அடிப்படை மனித உரிமை மீரலின் கீழ் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்வதற்கு சட்ட நிபுணர்களிடம் ஆலோசனைகள் தற்போது பெறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment