காடையர்களின் அடாவடித்தனங்களுக்கு அங்கீகாரமாக அமைந்து விடக் கூடாது..!
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
முஸ்லிம்களின் வழிபாடுகள் அல்லது மஸ்ஜிதுகள், அல்லது வேறு ஏதேனும் விவகாரங்கள் பௌத்தர்களையோ அல்லது வேறு மதத் தவர்களையோ பதிப்பதாயின் காடையர்கள் சட்டத்தை கையிலேடுப்பதனை ஒரு பொழுதும் அங்கீகரிக்க முடியாது, மாறாக உரிய முறையில் சட்டம் நீதி ஒழுங்கை நிலை நிறுத்துகின்ற பொறுப்பு ஜனாதிபதி மற்றும் அரசையே சாரும்.!
முஸ்லிம் சிவில் சன்மார்க்க அரசியல் தலைமைகள் விடயங்களை நன்றாக ஆராய்ந்த பின்னரே ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பார்கள் என அதிருப்தியோடேனும் நாம் நம்ப வேண்டி இருந்தாலும் ஒரு தன்மானமுள்ள முஸ்லிம் தலைவனாவது அரசிற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதன் மூலம் முஸ்லிம்களது உணர்வுகளை உலகறியச் செய்தல் வேண்டும்..என பலரும் எதிர்பார்க்கிறார்கள்..!
எந்தவொரு நிலைப்பாட்டையும் நிதானமாகவே முஸ்லிம் தலைமைகள் எடுக்க வேண்டும். ஒரு அரசியல் நெருக்கடிக்குள் முஸ்லிம்களை தள்ளுவதும் பேரின வாதிகளின் இலக்காகும்.
கொழும்பு கிறேன்பாஸ் புதிய பள்ளிவாயலில் தொழுவதில்லை என இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது, புத்தசாசன அமைச்சின் செயலாளர் திசாயநாயக்க இக் கூட்டத்ததை ஏற்பாடு செய்திருந்தார்.
அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் புதிய பள்ளிவாயலில் இனி தொழுகை நடாத்துவதில்லை தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி வீதியில் இரண்டு பள்ளிவயால்கள் உண்டு அதில் ஒன்று பழய பள்ளிவாலும் இன்னுமொன்று புதிய பள்ளிவாலுமாகும்.
இந்த புதிய பள்ளிவாயலில் எக்காரணம் கொண்டும் தொழுகை நடாத்தக் கூடாது என்பதே பௌத்த தீவிரவாதிகளின் வேண்டுகோளாகும்.
இங்கு பழைய பள்ளி நீண்டகாலம் பயன்படுத்த்தப் படவில்லை என நினைக்கிறேன். பழைய பள்ளியின் முன் உள்ள போதி மரம் காரணமாகவே புதிய பள்ளி கட்டப்பட்டது. இனவாத தலைவர்கள் இந்த பகுதியில் எந்த ஒரு இடத்த்திலும் பள்ளியை கட்ட விட மாட்டோம் என திரும்ப திரும்ப கூறி வரும் நிலையில் மீண்டும் பழைய பள்ளி வாசலை நோக்கி நகர்வதானது புத்திசாலித் தனமான முடிவாக தோன்றவில்லை. ஏனெனில் பழைய பள்ளி நகர அபிவிருத்த்த்தியின் கீழ் வரும் இடமாக இப்போது உள்ளது. மேலும் பழைய பள்ளி முன் உள்ள போதி மரம் அகற்றப்படும் வரை பழைய பள்ளி இயங்க மாட்டாது, போதி மரத்தை அகற்ற மூட்படும் போது மீண்டும் இதே போன்று கலவரம் ஒன்று தோற்றிவிக்கப்படும் என்றே நான் கருதுகிறேன். ஆக இறுதியில் இரு இடங்களையும் விட்டு கொடுத்த்த நிலை தோன்றலாம். இவ்வாறு கலவரம் தோற்ரிவிக்கப்படுவதும் எமது தரப்புக்கள் பேச்சுவார்த்த்த்தைக்கு போவதும்,பின் விட்டுகொடுப்பதும் அதனை ஹுதைபிய்யா உடன் தொடர்பு படுதித்தி சிலாகிப்பதும் முதலில் நிறுத்த்தப்பட வேண்டும். நாட்டில் எல்லோருக்கும் பொதுவான சட்டம், நீதி மன்றங்கள் உள்ளதை நாம் மறந்தே போய் விட்டோமோ என சந்தேகிக்க வேண்டி உள்ளது.
ReplyDeleteஇன்று நடப்பவற்றைப் பார்க்கும் போது மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கூறியது போல் முஸ்லிம் தலைவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நாள் மிக விரைவில் வந்து விடும்போல் தோன்றுகிறது.
ReplyDelete