Header Ads



மட்டக்குளியவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

நேற்று முன்தினம் இரவு (30) மட்டக்குளிய கெமுனுபுர பகுதி சுமார் 37 வீடுகள் எரிந்து சாம்பலாது இதற்கு காரணம் ஒரு வீட்டில் எரிந்து கொண்டிருந்த குப்பி விளக்கு சரிந்து வீழ்ந்து தீப்பற்றியதால் மேற்படி அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது தமிழ், முஸ்லிம், சிங்கள ஆகிய மூவினத்தைச்சேர்ந்த சுமார் 37 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர் பாதிக்கப்பட்ட அருகில் உள்ள மஸ்ஜிதுல் பிலால் பள்ளி மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.

இதன்போது அங்கு வசித்து வரும் ஏ.எம்.அலாவுதீன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் தமது குடும்பத்தில் நான்கு வீடுகள் எரிந்து விட்டதுடன் அனைத்துப் பொருட்களும் முக்கிய ஆவனங்களும் எரிந்து நாசமாகிவிட்டதாக கவலை தெரிவித்ததுடன் எங்களுக்கு பணம் தந்து உதவுவதைவிட எமது இருப்பிடத்தை கட்டித்தந்தால்போதும் என்றார்.

இதேவேளை பெண்களும் சிறுவர்களும் தமது இருப்பிடம் எரிந்து சாம்பலானதையும் தமது கற்றல் உபகரணங்கள் அழிவடைந்ததையும் கண்டு  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேற்படிப் பகுதி களனியாற்றின் ஓரத்தில் அமைந்துள்ளதுடன் களனியாறு பெருக்கெடுக்கும்போது மேற்படி வீடுகளுக்குள் நீர் வருவதும் , நுளம்புத் தொல்லை உள்ளிட்ட பல அசௌகரியமான வாழ்க்கை சாதாரண விடயமாக காணப்படவதுடன் வசிக்கும் அனைவரும் நாளாந்தம் கூலி வேளை செய்தும் தமக்குக்கிடைக்கும் உதவிகளைக் கொண்டும் குடும்பம் நடத்தும் மக்களாகவே காணப்படுகின்றனர்.

இன்றைய கொழும்பின் பல்வேறுபட்ட நவீன அபிவிருத்தியில் களனியாற்றுப்பகுதியில் மிகமோசமாக கஸ்டத்துடன் சேரிவாழ்வில் மூழ்கியிருக்கும் மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவது யார்? ஏன் இவ்வாறான மக்களின் வாழ்வில் அரசியல் பிரமகர்களும், அரசாங்கமும் பாராமுகமாக இருக்கின்றன என்பதும் தற்போதைய கேள்விக்குறியாகும்.


No comments

Powered by Blogger.