ஆண்களுக்கு மார்பகப்புற்று நோய் வரும் - பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரிக்கை
ஆண்களும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்படுவதாக,அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின், டெக்சாஸ் பல்கலை ஆய்வாளர்கள், மார்பகப் புற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். பொதுவாகப் பெண்களை மட்டுமே பாதிப்பதாகக் கருதப்பட்ட, மார்பகப் புற்று நோய், ஆண்களையும் பாதிப்பதாக ஆய்வுகள் வெளியாகி உள்ளன.
பொதுவாக, ஒரு லட்சத்தில், ஒருவர் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. "ஈஸ்ட்ரோஜென்' எனப்படும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும் ஆண்களுக்கு, மார்பகப் புற்று நோய் வருவதாக, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சம் ஆண்களில், 0.86 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பு இருந்த நிலையில், தற்போது, 1.08 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து உள்ள னர்.
இந்த வகையில், பெண்களை விட, ஆண்களுக்கு, வேகமாக மார்பகப் புற்று நோய் பரவியுள்ளதாக, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.ஆண்கள் தங்கள் மார்பகங்களை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், சிறிய அளவிலான கட்டி ஏற்பட்டாலும்,உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் எனவும், ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
Post a Comment