மாகாணசபைத் தேர்தலும், முஸ்லிம் சமூகமும்
(கே.சி.எம்.அஸ்ஹர்)
வட மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் போன்றவற்றுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் மிகுந்த அவதானத்துடன் தமது வாக்கை அளிக்க வேண்டிய நிலையுள்ளது. முஸ்லிம் வேட்பாளர்கள் அளும்கட்சி, எதிர்க்கட்சி, சுயேட்சைக் குழுக்கள் என்று பல்வேறு கட்சிகளில் களத்தில் குதித்து உள்ளனர். இதனால் முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு வேறு சில சமூகத்தினருக்கு வாய்ப்பானதாக மாறவும் வாய்ப்புள்ளது. மேலும் கடந்த காலத்தில் மாகாணசபை பிரதிநித்துவத்தை பெற்றருந்த பிரதேசங்கள் இம்முறை பிரதிநிதிகளை இழக்கும் வாய்ப்பு உள்ளது.
பள்ளிவாயல்கள்,சமூக அமைப்புக்கள்.கழகங்கள்,சங்கங்கள் போன்றவை முஸ்லிம்களின் வாக்களிப்பு வீ;தத்தை அதிகரிக்கச்செய்ய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இலங்கை முஸ்லிம்களிடத்தே அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய மாமனிதர்களாக பின்வருவோரை நாம் பார்க்கிறோம்.அறிஞர் சித்திலெப்பை,டி.பி.ஜாயா,அராபிபாஷா,சேர்.ராசிக் பரீத்,பதியுதீன் முஹம்மட்,எம்.எச்.எம்.அஸ்ரப்.
குறிப்பாக எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களே முஸ்லிம் பெண்களிடத்தே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்ற உண்மையை உரத்துக்கூறலாம்.
வேட்பாளர்கள் எதிரணியினரை மோசமான வார்த்தைப்பிரயோகம் மூலம் விமர்சிப்பதை விடுத்து இங்கிதமான முறையில் தமது எதிர்காலச்செயற்றிட்டங்களை மக்கள் முன் வைக்கவேண்டும்.மோசமான விமரிசனங்கள்,வன்முறைகள் போன்றவற்றை மக்கள் வெறுக்கின்றனர்.இதனை வேட்பாளர்கள் அனைவரும் தமது மனதில்கொள்ளவேண்டும்.ஜனநாயக அடிப்படையில் செயற்பட யாவருக்கும் உரிமையுண்டு.
தாம் விரும்பிய ஒவ்வொருவருக்கும் வாக்களிப்பது வாக்காளரின் ஜனநாயக உரிமை .இவ்வுரிமை எமது மூதாதையர்களால் போராடிப்பெறப்பட்ட ஒன்றாகும்.எமது நாட்டில் ஆரம்பத்தில் படித்த வர்க்கத்தினருக்கும்,பின்னர் மத்தியதர வர்க்கத்தினருக்கும்,அடுத்து அனைத்து ஆண்களுக்கும்,இறுதியாகப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
இவ்வாறு பல சிரமங்கட்கு மத்தியில் கிடைத்த வாக்குரிமையின் பெறுமதியை எம் சமூகத்தில் குறிப்பிட்ட சிலர் அறியாமலுள்ளனர்.|இவர்கள் இராமன் ஆண்டாலென்ன ,இராவணன் ஆண்டாலென்ன,? அல்லது கூடவந்த குரங்கு ஆண்டாலென்ன?என்ற மனப்பாங்கில் செயற்படுகின்றனர்.இக்குழுவில் படித்த அரச ஊழியர்கள்,வயதான ஆண்கள்,வயதான பெண்கள்,சில சமய ஈடுபாடுடைய இளைஞர்கள்,ஹஜ்,உம்ரா கடமைகளைப் பூர்த்தி செய்த சிலர்.
இவர்கள் வாக்களிப்புத்தினத்தன்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிப்பதில்லை.இதனால் இவர்களின் வாக்கு வீணாகிறது.ஆனால் தமிழ் சிங்களப்பிரதேசங்களில் நிலைமை மாற்றமாக உள்ளது.இப்படி முஸ்லிம்களின் வாக்களிப்பு விகிதம் குறைந்தால் நிலைமை என்னவாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
கடந்த காலங்களில் விட்ட தவறுகளைத் திருத்திக் கொண்டு இம்முறை நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்கு அளிப்போமாக! .வாக்கு என்பது வெறும ;ஒரு ஒ புள்ளடி அல்ல. அதன் பின்னால் உள்ள தாற்பரியத்தையும் நாம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.நம்மால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதி நிதி சிறந்த மக்கள் சேவை செய்து பெயர் பெற்றால் அதன் நன்மையில் நமக்கும் பங்கு உண்டு.
மாறாக ,எம்மால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி அடாவடி,பாரபட்சம்,அநீதி,ஊழல் போன்ற பாவச் செயல்களில் ஈடுபடுபவராக இருந்தால் அதன் பங்கும் ,பாவமும் எமக்கும் உண்டு. என்பதை புரிந்த கொள்ள வேண்டும்.
நாம் ஓருவருக்கு வாக்களிக்க முன்பு பின்வரும் விடயங்களைப் பற்றியும் சற்று யோசித்து முடிவு செய்வது சாலச் சிறந்தது என்பது எனது பணிவான யோசனையாகும்.
கல்வி கற்றவரா?
உண்மை,நேர்மை உள்ளவரா ?
மக்களால் இலகுவாக அணுகப்படக்கூடியவரா?
சமூகம் பற்றிய அக்கறை உள்ளவரா?
சமூகசேவையில் ஈடுபடுபவரா?
சவால்களை எதிர்கொள்ளும் திறன் உடையவரா?
ஊழல்களில் ஈடுபடுபவரா?
வாக்குறுதியைக் காப்பாற்றுபவரா?
சமய,சமூகவிழுமியங்களை மதிப்பவரா?
முதியோரையும் ,சிறியோரையும் நேசிப்பவரா?
பணம் சம்பாதிப்பதை நோக்காகக் கொண்டவரா?
சிறந்த சமூகம்பற்றிய தூரநோக்கு உடையவரா?
ஊடகங்களுடன் தொடர்புடையவரா?
சமூக அநீதியைத் தட்டிக்கேட்பவரா?
சிறந்த குரல்வளமும்,பேச்சாற்றலும் உடையவரா?
உரிமைகளைப் போராடிப் பெற்றுத்தரக்கூடியவரா?
உரிய அரசியல் கட்சிக்கு விசுவாசமானவரா?
இவ்வளவு தகுதிகளை உள்ளடக்கிய ஒரு அரசியல் வாதியையும் நாங்கள் இதுவரைக்கும் பாக்கவில்லையே ,,,மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் வபாத்தானதன் பின் ,,,,,,,
ReplyDelete