புலிகளின் விமான ஓடுபாதையை பயன்படுத்திய நவநீதம் பிள்ளை (படம்)
விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையில் இருந்து, விமானப்படை விமானம் மூலம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்ட அவர், நேற்றுமுன்தினம் மாலை இரணைமடு ஓடுபாதைக்கு சென்றார்.
அங்கிருந்து ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவுடன், விமானப்படையின் எம்.ஏ.60 விமானம் மூலம் திருகோணமலை சீனக்குடாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையைப் பயன்படுத்திய முதலாவது உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர் நவநீதம்பிள்ளையே என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment