Header Ads



கிரிக்கெட் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்த இங்கிலாந்து வீரர்கள் - உலகம் அதிர்ச்சி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷல் தொடரை வென்றதால் ஏற்பட்ட உற்சாகத்தில் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்து அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள். 

கிரிக்கெட் விளையாட்டையே கேவலப்படுத்தியுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள் என்றும் கண்டனக் குரல்கள் வெடித்துள்ளன. அவுஸ்திரேலியாவுக்கு   எதிரான ஆஷஸ் தொடரை 30  என்ற வென்ற மமதையில் தான் இப்படி அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள்.

ஆனால், ஒரு போட்டியில் கூட அவுஸ்திரேலியா வெல்லவில்லை. இதனால் அவுஸ்திரேலிய ரசிகர்களும் வீரர்களும் கடும் சோகத்திலுள்ளனர்.   இந்த வெற்றியை இங்கிலாந்து வீரர்கள் தலை கால் புரியாமல் கொண்டாடியுள்ளனர். அதாவது மைதானத்திற்குள் புகுந்து சிறுநீர் கழித்து விளையாடியுள்ளனர். 

 இப்படி ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தல் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்திலேயே அதன் வீரர்கள் இப்படி அசிங்கமாக நடந்து கொண்டிருப்பது வரலாறு காணாத   செயல் என்று வர்ணிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் நடந்தது ஓவல் மைதானத்தில். பிரபலமான இந்த ஓவல் மைதான ஆடுகளத்திற்குச் சென்று இப்படி இங்கிலாந்து வீரர்கள் சிறுநீர் கழித்த செயல் ஓவல் மைதானத்திற்குப் பெரும் அவமானமாகியுள்ளது. 

கெவின் பீற்றர்சன் , ஸ்ரூவர்ட்  புரோட் ஆகியோர் தான் சிறுநீர் கழித்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுடன் மேலும் சில வீரர்களும் சம்பவ இடத்தில் இருந்தனராம்.

1 comment:

  1. நீதி, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு , ஒவ்வொரு மனிதனையும் மனிதனாக மதித்தல் ,எளியவனுக்கு உதவுதல் , இப்படி ஏராளமான நற்பண்புகளை , நபிகள் நாயகம் முஹம்மத் ஸல் அவர்களிடமும் அவர்களின் பாசறையில் வாளர்ந்தவர்களிடமும் மட்டுமே காண முடியும் , இது வரலாறு . தோற்றவனை ஏறி மிதித்தல் , இனவெறி , வரலாற்றிலே கிடையாது இந்த புனித நபியின் வழிகாட்டலில் வந்தவர்களிடம் .

    ReplyDelete

Powered by Blogger.