இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் அரசு - முல்லா முகமது ஒமார்
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப்படைகள் அடுத்த ஆண்டு விலகும்போது, தாங்கள் அதிகாரத்தை ஏகபோகமாகக் கைப்பற்ற முயலமாட்டோம் என்று ஆப்கன் தாலிபானின் தலைவர் முல்லா முகமது ஒமார் கூறியிருக்கிறார்.
முஸ்லீம் பண்டிகையான ஈத் பெருநாளுக்கு முன்னதாக விடுத்த அறிக்கை ஒன்றில், இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த ஒரு அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கும் அரசு ஒன்றை உருவாக்குவதற்கு ஆப்கானிய மக்களுடன் ஒரு புரிந்துணர்வை தாலிபான்கள் எட்ட முயல்வார்கள் என்றார் ஒமார்.
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல்களைப் பற்றி தனது வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்திய ஒமார், இது ஒரு காலத்தை வீணடிக்கும் செயல் என்றார்.
முல்லா ஒமார், 2001ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பிடித்துத் தருபவர்களுக்கு 10 மிலியன் அமெரிக்க டாலர்கள் பரிசு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. bbc
Post a Comment