Header Ads



முஸ்லிம் பெண் வேடத்துடன் கொள்ளையிட முயன்ற இராணுவ கப்டன் கைது

கண்டியிலுள்ள பிரபல வங்கியொ ன்றில் கொள்ளையிட முயற்சித்த இராணுவ அதிகாரியொருவர் இராணுவ நீதிமன்றத் திற்கு முன் நிறுத்தப் பட்டிருப்பதாக பாதுகாப்பு மற்றும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. குறித்த அதிகாரி முஸ்லிம் பெண்ணைப் போல் வேடமிட்டே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் இரண்டாம் (தொண்டர்) இராணுவ தரைப்படை பொது சேவை சிறப்பணியைச் சேர்ந்த கெப்டன் ஏ. எம். யு. சமரகோன் என்பவரெனவும் ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, குறித்த நபருக்கெதிராக பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ள நிலையிலும் இவர் சிவில் சமூகத்திற்கு இழைத்த துரோகத்திற்காக இராணுவ

நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளார். இராணுவ அதிகாரியொருவர் இது போன்ற செய்கைகளில் ஈடுபட்டி ருப்பது இதுவே முதல் தடவையாகும்.

சிவில் சமூகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இராணுவ அங்கத்தவர்களுக்கு இலங்கை இராணுவம் எவ்வித மன்னிப்பையும் வழங்கக்கூடாதெனவும் அவர்கள் இராணுவ நீதிமன்றத்திற்கு முன்பாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க இராணுவ நீதிச் சேவை பணியகத்திற்கு விடுத்த பணிப்புரைக் கமையவே மேற்படி குற்றமிழைத்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.