Header Ads



கிரன்ட்பாஸ் பள்ளிவாசலுக்கான காலக்கெடு நிறைவடைகிறது..!

கொழும்பு - கிரன்ட்பாஸ் பள்ளிவாசலில் புனித ரமழான் மாதத்தில் மாத்திரே தொழுகையை நடாத்த பௌத்தசமய விவகார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.

அதாவது நோன்பு ஆரம்பித்த காலம் தொடக்கம் நோன்பு முடிவடையும் காலப்பகுதியில் மாத்திரமே கிரன்ட்பாஸில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலில் தொழுகையை நடாத்த எழுத்து மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டியதுடன், இந்த காலக்கெடு முடிவடைந்தவுடன் பள்ளிவாசல் தொடர்பில் என்ன நடைபெறும் என்று தமக்கு தெரியாது என தெரிவித்தார்.

அதேவேளை நேற்று முன்தினம் சனிக்கிழமை, 3 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வவுனியாவுக்கு வந்திருந்த சமயம் கிரன்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் கதைத்ததாக அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் 10 ஆம் திகதி கிரன்ட்பாஸ் பள்ளிவாசலை மூடவேண்டியதில்லை என ஜனாதிபதி மஹிந்த தம்மிடம் கூறியதாகவும் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார். 

இருந்தபோதும் அப்படியான அறிவுறுத்தல்கள் தொடர்பில் தான் இதுவரை அறியவில்லையென முஜீபுர் ரஹ்மான குறிப்பிட்டார்.

4 comments:

  1. what is their final intention of closing Masjids?

    ReplyDelete
  2. ellam elikshan varikum than. aporam puthi ya kaduvanga!

    ReplyDelete
  3. Insha Allah Allah will help us

    ReplyDelete

Powered by Blogger.