Header Ads



எந்தவொரு பள்ளிவாயலையும் தாக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் - பிரதமரின் மகன்

(மொஹொமட் ஆஸிக்)

எனது தந்தை மத விவகாரங்களுக்கு பொருப்பான அமைச்சராக இருக்கும் வரையில் எந்த  ஒரு பள்ளிவாயலையும் எவருக்கும் தாக்க இடமளிக்க மாட்டோம் என்று பிரதமர் டீ.எம்.ஜயரத்னவின் மகனும் அவரது அந்தரங்க செயலாளரும் கண்டி மாவட்ட வேடபாளருமான அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

 2013 08 25 அக்குறணை நகரில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவதத்ர். இங்கு மேலும் உரையாற்றிய அனுராத ஜயரத்ன,

கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழல் ஏற்பட்டது. ஆனாலும் எந்த ஒரு சந்தர்பத்திலும் முஸ்லிம்களுக்கு பாதகம் ஏற்பட நாம் இடம் கொடுக்கவில்லை. புத்த சாசன அமைச்சரும் மத விவகாரங்களுக்கு பொருப்பான அமைச்சருமாக எனது தந்தையை இருக்கின்றார். ஆகவே இப் பிரச்சினகள் காரணமாக திட்டு  வங்கியவர் எனது தந்தையே.

புத்தசாஸன அமைச்சர் எனது தந்தை. மத விவகாரங்களுக்கும் அவரே பொருப்பாக இருக்கின்றார். நான் அவரது அங்தரங்க செயலாளராக இருக்கின்றேன் ஆகவே நான் உறுதியாக கூற விரும்புகின்றேன் எனது தந்தை மத விவகாரங்களுக்கு பொருப்பான அமைச்சராக இருக்கும் வரைக்கும் எந்த ஒரு பள்ளிவாயலையும் எவருக்கும் தாக்க நாங்கள் இடம் அளிக்க மாட்டோம். ஏன்று உறுதியாக கூறினார்.

4 comments:

  1. This in further ? Because we lost 24 mosque unto now ..

    ReplyDelete
  2. குழந்தைப்பிள்ளைதனமான பேச்சும் நாட்டு நடப்புக்கும் பேச்சுக்கும் சம்மந்தமே இல்லை.

    ReplyDelete
  3. Elcection ondru wandhal than iwarhal ippadikkooruwarhal, election mudinju wendradhum thewaikku call panninal phone switch off, idhuwairai nadandha sambawa neratthil iwarhal naattil irukka willayo

    ReplyDelete
  4. இவருடைய தந்தையால் சில வருடங்களுக்கு முன்னர் கம்போல இல்லவதுரையில் நடத்திய அடாவடித்தனம், இந்த மகனுக்கு மறந்துவிட்டது போல்

    ReplyDelete

Powered by Blogger.