அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரான் தீர்மானம்
ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை, 1953-ம் ஆண்டு சதி செய்து கவிழ்த்த குற்றத்துக்காக அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரான் முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக மசோதா ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு முதல்நிலை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்த மசோதா ஈரான் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் பங்கேற்ற 196 உறுப்பினர்களில் 167 பேர் மசோதாவை ஆதரித்தும், 5 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.
அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைத்து, விசாரணை அறிக்கையை 6 வார காலத்துக்குள் சமர்பிக்க வேண்டும்; அமெரிக்கா மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment