வாழைச்சேனையில் தீ விபத்து - வீடொன்று முற்றாக எரிந்து நாசம் (படங்கள்)
(அனா)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை பன்ஸல முதலாம் குறுக்கு வீதியில் இன்று (24.08.2013) சனிக்கிழமை திடீர் என ஏற்பட்ட தீ விபத்தினால் வீடொன்று முற்றாக எரிந்துள்ளது.
கல்லால் கட்டப்பட்டு கிடுகினால் கூறையிடப்பட்ட இவ் வீட்டில் தாயும் நான்கு பிள்ளைகளும் வசித்து வந்துள்ளனர் இன்று மதியம் 12.30 மணியளவில் வீட்டில் திடீர் என ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக எரிந்துள்ளதுடன் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்துள்ளன.
இத் தீ விபத்து தற்செயலாக இடம் பெற்றுள்ளதா அல்லது குறித்த குடும்பத்துடன் கோபத்தில் யாராவது தீ வைத்தார்களா என்ற சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment