எகிப்திய இராணுவ ஆட்சியாளருக்கு எதிராக பிரார்த்தனை செய்த இமாம் மீது விசாரணை
(Tn) சவூதி அரேபியாவில் எகிப்து பாதுகாப்பு அமைச்சரும் இராணுவ தளபதியுமான அப்துல் பத்தாஹ் அல் சிசிக்கு எதிராக தொழுகையின்போது பிரார்த்தனை நடத்திய மதப் போதகர் மீது அந்நாட்டு மத விவகார அமைச்சு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
ரியாத் பள்ளிவாசலில் சிசிக்கு எதிராக பிரார்த்தனை நடத்திய மதப் போதகர் மீது தொழுகையில் பங்கேற்ற ஒரு சிலர் தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் மற்றும் அல் சிசியையும் ஒப்பிட்டு அவர்களுக்கு எதிராக அந்த மதப்போதகர் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.
எகிப்து இஸ்லாமியவாத ஜனாதிபதி மொஹமட் முர்சியை பதவி கவிழ்த்த அல் சிசி, முர்சி ஆதரவாளர் மீது பாதுகாப்பு நடவடிக்கை எடுத்ததையடுத்து ஏற்பட்ட வன்முறைகளில் 1000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
எனினும் சவூதி அரசு, இராணுவ ஆதரவு பெற்ற எகிப்தின் இடைக்கால அரசுக்கு தனது முழு ஆதரவையும் வெளியிட்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.
சவூதி அரேபியாவில் எகிப்து பாதுகாப்பு அமைச்சரும் இராணுவ தளபதியுமான அப்துல் பத்தாஹ் அல் சிசிக்கு எதிராக தொழுகையின்போது பிரார்த்தனை நடத்திய மதப் போதகர் மீது அந்நாட்டு மத விவகார அமைச்சு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

Post a Comment