மியான்மரில் முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைத்த புத்த மதத்தினர்
மியான்மர் நாடு அமைதி இழந்து நிற்கிறது. இனக்கலவரங்கள் சிறிது தணிந்திருந்த வேளையில், தற்போது நேற்று புத்த மதப் பெண் ஒருவர், முஸ்லிம் ஒருவனால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற வதந்தி பரவியதை அடுத்து மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.
கண்ட்பாலு என்ற இடத்திற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. செய்தியை கேள்விப்பட்ட கிராம மக்கள் அங்கிருந்த காவல் நிலையத்தை அணுகி குற்றவாளியைத் தங்களிடம் விடுமாறு கேட்டுள்ளனர். அங்கிருந்த காவலர்கள் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் பனிரெண்டுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகளையும், கடைகளையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பதனையும் குறிப்பிட்டார். ஆயினும், அதற்குள் 35 வீடுகளும், 12 கடைகளும் தீவிபத்தில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
நேற்று இரவு இந்த சம்பவம் நடந்ததாக புத்த மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட விராத்து என்ற துறவி ஒருவர், தன்னுடைய இணையதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளா
Post a Comment