பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பப் பீடங்களை நிறுவ நடவடிக்கை
(எம்.எம்.ஏ.ஸமட்)
பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பப் பீடங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் மாணவர்களை தயார்படுத்தும் நோக்குடன் பாடசாலை மற்றும் பல்கலைக்கழங்களின் கல்வித் துறைகளில் காலத்துக்குக்காலம் தேவைக்கேற்ற வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இவ்வாண்டு முதல் பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரத்தில் தொழில்நுட்பப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, தொழில்நுட்பத்துறையில் புதிய கற்கை நெறியினூடாக விஞ்ஞான இளமாணிப் பட்டத்தைப் பெறவும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும். ஆத்துடன் ஒவ்வொரு பல்கலைக்கழமும் புதிய விடயங்களை அறிமுகப்படுத்ததத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அவர்களால் முடியுமான கற்கை நெறிகைகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் இதன் மூலம் ஏற்படுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவின் தலைவி மேலும் குறிப்பிடுகிறார்.
Post a Comment