Header Ads



நவனீதம்பிள்ளை விரும்பினால் நாளை அவரை மணந்து கொள்ளத் தயார் - மேர்வின் சில்வா

நவனீதம்பிள்ளையை திருமணம் செய்ய விரும்புகின்றேன் என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நாட்டைச் சுற்றி செல்வதற்கு தன்னை இணைத்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

நாட்டின் வரலாற்றை நவனீதம்பிள்ளைக்கு கற்றுக்கொடுக்க விரும்புகின்றேன். இராவண மன்னன் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

விஜய குமாரனுக்கு இளவரசி குவேனியை மணம் முடித்துக் கொடுத்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.. அதேபோன்று, நவனீதம்பிள்ளை விரும்பினால் நாளை அவரை மணந்து கொள்ளத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாருதானையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நவனீதம்பிள்ளைக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. ASALAA?ARIVAA? ASALTHAAN MUN VARUM ENBATHAI KAADDI VIDDAAR...

    ReplyDelete
  2. Ponga saar..... summa kamadi panrathe ungaluku velaya pochchu...

    ReplyDelete
  3. This idiot has also dragged the Islamic Marital Code as well saying that Muslim Men in Sri Lanka are legally permitted to marry 4 wives whereas other communities in the same country is legally allowed to marry only one, and he is making a request to relax the law with respect of the marital code enabling the non Muslim communities as well to marry more than one to make use of such an act. We should tell to this moron that only physically, mentally and economically able Muslims who will maintain justice among the wives are subject to marry four thus unfortunately he did not meet all these aforesaid conditions!!!

    ReplyDelete
  4. இவரின் இந்த பேச்சை கண்டு நான் வியக்கவில்லை. காரணம் இது இவரின் குடும்ப பழக்க வழக்கம். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று சொல்லுவார்கள். அப்படி தான் இவரும்.

    இவருக்கு ஏதும் பிரச்னை, சொறி எண்டால் களனி பிரதேசத்தில் இருக்கும் ஒரு சிங்கள பெண்ணை பார்த்து மணம் முடிக்கலாம். அதற்கு எதுவித பிரச்சனையும் யாருக்கும் இல்லை. தன்னுடைய மனைவியை முதலில் ஒழுங்காக பாருங்கள் கையாலகாத அமைச்சருக்கு வேறு ஒரு திருமணம் கேட்குதாம். (ஒருத்தனுக்கு ஒருபொண்டாடிக்கே வக்கு இல்லையாம் இதில் ஒன்பது பொண்டாடி கேட்குதாம்) அப்படி தான் இவரின் நிலை.

    அப்பர் எந்த வழியோ அவ்வழியே பிள்ளையும். மாலக்க சில்வாவின் செயல்பாடுகள் கொழும்பு முதல் கதிர்காமம் வரை நாறுகிறது. அதை கவனிக்க திராணி இல்லை இங்கு வந்துட்டார் கருத்து சொல்ல. இவரின் இந்த பேச்சிக்கும் அரசு ஒரு விளக்கம் வைத்து இருக்கும். (அவரின் தனிப்பட கருத்து, கருத்து சுதந்திரம் etc )

    இவர் தான் திருமதி. ரோசி சேனநாயக அவர்களிடம் பால் குடிக்க ஆசை எண்டும் பேசியவர். இவர் பேசுவது சிலருக்கு சிரிப்பு, சிலருக்கு பெருமை. ஆனால் பெரும்பாலான மக்கள் கேவலமாக,அருவிருப்பாக பார்கிறார்கள். ஒரு பொறுப்பு உள்ள அரசும், அதில் அமைச்சி பதவி வைத்து இருக்கும் இவர் ஒரு ஐநா பிரதிநிதியை பார்த்து பேசுவது எவ்வலு மோசமான நிலை என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இது தான் இந்த நாட்டின் நிலை. ஒருத்தர் அழகான பெண்கள் வேண்டும் என்று பேசுகிறார், மற்றுமொரு வெள்ளவத்தை பகுதியில் தமிழ் பெண்கள் சிங்கரநடை என்று பேசுகிறார். அப்படி பேசுவம் அவர்கள் முதலில் தாங்கள் பெண்களையும் நினைத்து பார்க்கவேண்டும். மிக கிழ்த்தரமாக சில அமைச்சர்கள் நடந்துகொண்டு இருக்கிறார்கள். கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு அதுக்க இவ்வாறான கிழ்த்தரமான பேச்சிகள் & பிறரை காயப்படுத்துவது பெயர் கருத்து சுதந்திரம் இல்லை. நாட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை. இவ்வாறு பேசி ஏனைய மக்களை காயபடுத்தி பிரச்சனையை மேலும் வளர்க்க தான் பார்கிறார்கள் & புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கும் இது தான் தேவை. காரணம் அரசியல் பிழைப்பு நடத்த நாட்டில் எதோ ஒருவனை நொண்டிக்கொண்டு இருக்கவேண்டும். அது தான் பேரினவாதிகளின் பக்கம். இதை நாங்கள் உலகம் முழுவதும் பார்க்கலாம்.


    இவருக்கு எதிராக அரசும் ராஜபக்ச ராஜாங்கமும் நடவடிக்கை எடுக்கும் எண்டு நினைத்தால் நாங்கள் தான் முட்டாள்கள்.இவ்வாறான பேட்சிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த அரசுக்கும் பெரும் அபகிர்த்தியை ஏற்படுத்துமே தவிர வேறு ஒன்றும் கிடையாது.

    நன்றி
    ஜெகன் திருப்பதி
    ரியாத்

    ReplyDelete
  5. சின்ன வயதில் இந்த ஆளுடையா தலை எங்கோ பட்டுள்ளது, இப்போ நோய் முற்றிப்போய் விட்டது, அங்கொடைக்கும் அனுப்ப முடியாது, அங்குள்ளதுகளின் நிலைமை இன்னும் மோசமாகும், என்ன செய்யலாம். பேசாமல் நம்ம அஸ்வர் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். ரெண்டும் சேர்ந்து பெண்களை கேலி பண்ணிப்பண்ணி அவர்களின் செருப்படி பட்டாவது திருந்துதா என்று பார்போம்

    ReplyDelete
  6. அது ஒன்றுமில்லை மூ......ம் குடித்ததும் இது மாதிரி ஆயுப்போச்சு. வடக்கிலே சென்றபோதும் இதுபோன்றதொரு அறிவித்தலைத்தான் பொடியன் சொல்லி இருக்கின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.