Header Ads



நான் வெற்றிபெற்றால் அது குருநாகல் முஸ்லிம்களுடைய வெற்றியாகும் - சத்தார்

(இ. அம்மார்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பின் போது இலங்கையில் எந்தப் பள்ளிவாசல் உடைப்புத் தொடாபாக ஒரு தெளிவான கருத்தை முன்வைக்காமல்  பசப்பு வார்த்தைகளை சொல்லித் திரிகின்றார். இவர் தேர்தல் மேடைகளில் ஒரு பிரச்சாரத்தையும் தேவையான சந்தர்ப்பத்தில் இனனுமொரு கபடத்தனமான பிரச்சாரத்தையும் செய்து வருகின்றார். நாட்டின் நீதி அமைச்சராக இருந்து கொண்டு நீதியான முறையில் நடந்து கொள்ள முடியாதவராக உள்ளார் என்று குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் பிங்கிரிய தேர்தல் தொகுதியில் திருவுரும்பொல என்ற இடத்தில் நடைபெற்ற பொதுசன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக் கிளைக் காரியாலத்தில் வேட்பாளர் அப்துல் சத்தாரை ஆதரித்து நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது அதன் போது கலந்து கொண்ட அப்துல் சத்தார் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

முஸ்லிம்களுடைய உரிமை தனித்துவம் எனப் பேசுவோர் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து பேசவில்லை.  முஸ்லிம்களுடைய வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக மட்டும் தேர்தல் மேடைகளில் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகிறது எனக் கூறிவருகின்றார். இவர் இன்று நாட்டில்  நடைபெறும் உண்மையை நிலையைக்  கூறாமல் இவர் முஸ்லிம்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஒரு துரும்புச் சீட்டாக பயன்படுத்திக் கொண்டு சந்தர்ப்பவாத அரசியலை செய்து கொண்டு வருகின்றார். இந்தக் கட்சி தம் சமூகத்திற்காகச் செயற்படவில்லை. தம் சமூகத்தின் அபிவிருத்தி எனக் கூறப்படும் கல்வி முதல் ஏனைய அபிவிருத்தி தொடர்பாக அவ்வித அக்கறையும் கிடையாது. முஸ்லிம்களுடைய வாக்குகளைச் சிதறடித்து  முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் பிரதிநிதித்துவங்கைள இல்லாமற் செய்யும் சதித்திட்டத்திலேயே ஈடுட்பட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் குருநாகல் மாட்டத்தில் நான்கு மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். குளியாப்பிட்டிய நகரில் எமக்குகெதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.  அவர்கள் எந்தி சென்ற பதாதைகளில் பன்றி உருவத்தை எழுதி அதற்குள்ளே அல்லாஹ் என்ற வாசகத்தை எழுத்திக் கொண்டு சென்றனர். அதை தடுப்பதற்கேர் அது குறித்து உயர் அதிகாரிகளுக்ளோ தெரிவிப்பதற்கோ எவரும் முன் வரவில்லை.. குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் வேண்டுகோளின் பிரகாரம்  அந்த இடத்திற்கு நான் உடன் விஜயம் செய்து இந்தச் சம்பவம் தொடாபாக ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியதுடன் சர்வதேச உலகிற்கு முதன் முதலில் கொண்டு சென்றவன்  என்பதை சர்வதேச உலகம் நன்கு அறியும். அதேபோல் நாரம்மலச் சம்பவம் நகரிலுள்;ள கடைகளை அகற்றி விடுமாரிக் கோரி சகல முஸ்லிம் கடைகளுக்கு அனுப்பப் பட்ட கடிதம் தொடர்பாக பொலிஸில் சென்று முறைப்பாடு தெரிவிப்பதற்கு எந்தப் பிரதேசத்தில் ஒருவர் கூட முன்வரவில்லை. அந்தளவுக்கு அவர்கள் பயந்து போய் இருந்தார்கள். நானே சென்று என்னுடைய பெயரில் பொலிஸில் அந்த முறைப்பாட்டைத் தெரிவித்தேன்.

இது போன்ற குருநாகல் மாவட்டத்தில் நடந்த சம்பவங்களுக்கு நான் முன்னின்று  உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவற்றைத் தணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன்.  மக்கள் பிரதிநிதி என்ற கோதாவில் இருந்த எவரும் முன்வரவில்லை. இதனை ஆளும் தரப்பில் இருந்தால் மாத்திரம் தான் செய்யமுடியும். நான் பேசியதைத் தான் அசாத் சாலியும் பேசினார். அவர் சிறைச்சாலை சென்றார். நான் செல்வில்லை. ஷஅதனை இணையத்தளம் பேஷ; புக் ஊடாக நீங்கள் அறிந்து கொள்ளலாம். அரசாங்க தரப்பில் இருந்து கொண்டு அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, தினேஷ; குனவர்தன போன்ற அமைச்ர்கள் குரல் கொடுக்க முடியுமென்றால் ஏன் எங்கள் சமூகத்தன் விடயங்களுக்காக குரல் கொடுக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நாம் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை, இந்த நாட்டில் எல்லா மக்களுக்குரிய உரிமையும் சுதந்திரமும் நமக்கு உண்டு. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் அதனைப் பேசுவதற்கு அஞ்சினார்கள். நான் ஜனாதிபதியிடம் இது தொடாபாக தற்துணிவுடன் கூறியுள்ளேன் என்பது எல்லோரும் அறிந்த விடயம்.

இந்தப் பள்ளி உடைப்பு, கிராண்பாஸ் சம்பவங்கள் எல்லாம் முஸ்லிம்களையும் இந்த அரசாங்கத்தையும் தூர பிரித்து முஸ்லிம்களை மாத்திரம் தனிமைப்படுத்த எடுக்கின்ற மேற்கத்திய நாடுகளின் சதி முயற்சியாகும். கிராண்பாஸ் பள்ளி விவகாரத்தில் அரசாங்கம் முஸ்லிம்களின் பக்கம் நின்று பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது அவர்களுடைய புனித மரமான அரச மரத்தை வெட்டி மேலதிகமாக ஒரு காணித் துண்டையும் பள்ளி விஸ்தரிப்புக்காக எமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அரச மரம் வெட்டப்பட்டு விட்டதென எந்த சிங்கள மக்களும் விசமப் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை நாங்கள் தான் சிறு சம்பவங்களை பூதகரமாக்கிக் கொண்டு பொய்யான வதந்திகளை எதிர் தரப்பினர் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த தேர்தலில் நான் வெற்றிபெற்றால் அது முஸ்லிம்களுடைய வெற்றியாகும் நான் வெற்றி பெறவில்லை என்றால் குருநாகல் மாவட்ட ஒட்டு மொத்த முழு முஸ்லிம்களுடைய தோல்வியாகும். மாகாண சபை உருவாக்கப்பட்டு இன்று வரை இந்த சோகமான வரலாற்றை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கிறது என்பதை இன்று முஸ்லிம் புத்திஜீவிகள் சமூகம் உணர்ந்துள்ளது.  முஸ்லிம்களுடைய கல்வி சமூக அபிவிருத்தி முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை ஆளும் கட்சி சார்பாக அனுப்புவதிலேயே தாங்கியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

5 comments:

  1. Sorry boss.u r in the wrong path........no chance of winning.......

    ReplyDelete
  2. Insha Allah, you and your party coalition Raouf Hakeem's contestants will loose.... No doubt.... We knew that Raouf Hakeem joined with ruling party for his advantage and not for muslims favour. Leave him and his party.... and now tell us your "Muslim Honourable" ministers Azwar, Kader, Fouzi, Alavi Moulana...... what they have done for current situtaion against Sri Lankan Muslims. One day BBS will say "we are going form a political party" then you people will say "we are the members of BBS". This is called "POLITICAL".

    ReplyDelete
  3. Sorry bro.abdul saththar.....

    ReplyDelete
  4. very sorry you and raufhakeem allah give hidhayath both of you

    ReplyDelete

Powered by Blogger.