Header Ads



ஆதம் மலையின் பாதத்தினில் அரேபியரின் பாதம்...!

Zuhair Ali (Ghafoori-UoC)

 இலங்கை வரலாறு வெறுதே ஒரு இனத்துக்கோ,மதத்துக்கோ சார்பான ஒரு தீவாக யாரும் கருத முடியாது ஏன் எனில் இலங்கைக்கு வருகை தந்த வர்த்தக அரேபியர்கள் மாத்திரமன்றி அர்-ராஹில் என்று சொல்லுப் படுகின்ற இப்னு பதூதா அவர்களின் வருகை கூட எமக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் என்ன தொடர்பு,மரபு,பாரம்பரியம் இருப்பதை வரலாற்றுக் கதைகல்மூலம் விளங்க்கிக் கொள்ளலாம்,

இஸ்லாம் மார்க்கம் வருவதற்கு முன் நீண்ட காலம் தொட்டே அரபியர்கள் எனும் முஸ்லிம் இனத்தவர்கள் இலங்கைப் பற்றி அறிந்திருந்தனர். கிரேக்கர்களும் ரோமர்களும் இந்நாட்டின் விடயங்களை அராபி பயணிகள் மூலமே அறிந்து கொண்டனர். அப்படியிருந்தும் அராபியர்கள் எனும் முஸ்லிம்கள் மூலம் எழுதப்பட்ட நூற்களில் இலங்கைபற்றிய செய்திகள் இஸ்லாம் தோன்றிய பின்பே எழுதப்பட்டுள்ளது.
 
முதலில் சுலைமான் என்பவர் மூலமே இந்நாடுபற்றி எழுதப்பட்டது. கி:பி:950ம் ஆண்டு ஸில்ஸிலா அல்கவாரி எனும் நூலில்இலங்கைப்பற்றிய செய்திகள் உள்ளடக்கபட்டது. அதன் பின் இலங்கைப்பற்றி மிக முக்கிய வர்ணனைகள் வழங்கியவர் இப்னு பதூதா என்ற எழுத்தாளர் ஆவார். இலங்கை வரலாறு வெறுதே ஒரு இனத்துக்கோ,மதத்துக்கோ சார்பான ஒரு தீவாக யாரும் கருத முடியாது ஏன் எனில் இலங்கைக்கு வருகை தந்த வர்த்தக அரேபியர்கள் மாத்திரமன்றி அர்-ராஹில் என்று சொல்லுப் படுகின்ற இப்னு பதூதா அவர்களின் வருகை கூட எமக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் என்ன தொடர்பு,மரபு,பாரம்பரியம் இருப்பதை வரலாற்றுக் கதைகல்மூலம் விளங்க்கிக் கொள்ளலாம்,

அதன் பின் இலங்கைப்பற்றி மிக முக்கிய வர்ணனைகள் வழங்கியவர் இப்னு பதூதா என்ற எழுத்தாளர் ஆவார். மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். அர்-ரிஹ்லா எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர்பெற்றவை. இவரது பயணங்கள் ஏறத்தாழ 30ஆண்டுகள்நீடித்ததுடன்,அறியப்பட்ட இஸ்லாமிய  உலகம் முழுவதையும்,அதற்கும் அப்பாலுள்ள நாடுகளையும் உள்ளடக்கி இருந்தன. இவற்றுள் இலங்கை தீவும் உள்ளடங்கும்.

நாங்கள் மஆபார் புறப்படும்போது ஹிஜ்ரி 745 ஜமாத்துல் ஆகிர், (22-8-1344). அனுபவமில்லாத மாலுமியினால் மூன்று நாட்களில் மஆபார் செல்லவேண்டிய நாங்கள் ஒன்பதாவது நாள் சைலான் தீவை(சிலோன்) அடைந்தோம். சொர்க்கத்தின் மீது இருப்பதுபோல் புகை மூட்டத்துடன் 'சரன்தீப்'(ஆதம் மலை) தெரிந்தது. தீவை அடையும்போது மாலுமி சொன்னார், இங்கே இறங்குவது உசிதமல்ல இது 'ஆயிரி சக்ரவதி' ஆட்சியில் இருக்கிறது, இவன் கொள்ளைக்காரன் இவனது கடற்கொள்ளைக் கப்பல்களை இங்கே நிறுத்தி வைத்திருக்கிறான் என்றார்.

அத்துறைமுகத்துக்குச் செல்ல நாங்கள் பயந்தோம், ஆனால் கடும் காற்று வீசத் தொடங்கியதால் எங்கள் கப்பல் மூழ்கிவிடும் அபாயம் ஏற்பட்டது. நான் சொன்னேன், நீ எப்படியாவது என்னை கரையில் இறக்கிவிடு நான் ராஜாவிடம் பேசிப்பார்க்கிறேன் என்று. ஒருவகையாகக் கரை இறங்கினேன். நான் இறங்கிய இடத்திலேயே அம்மன்னனின் ஆட்கள் என்னை சூழ்ந்து "நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?" என்றனர். "நான் மஆபார் மன்னரின் மைத்துனரும் நண்பனும் ஆவேன்" என்றேன். உடனே மன்னரிடம் அறிவிக்கப்பட்டதும் தன்னைக் காண எனக்கு அழைப்பு வந்தது. பட்டாளா என்ற அவரது தலை நகருக்கு அழைத்துச்சென்றார்கள், நான்கு வசமும் மரத்தாலான சுவர் எழுப்பப்பட்டு நடுவே மன்னரின் இருப்பிடம் இருந்தது, முழுவதும் இலவங்க மரத்தால் சூழப்பட்டிருந்தது.

அவரது இருப்பிடம் அடைந்ததும் எழுந்து என்னை வரவேற்று தன் அருகில் அமரவைத்தார். என்னைப் பற்றி விசாரித்தபோது நான் மஆபார் நாட்டு மன்னரின் உறவினர், நண்பர் என்று சொன்னதும் என்னை மூன்று நாட்கள் தங்கிப்போக பணிந்தார். நிறையப் பரிசுகளும் முத்துக்களும் தந்து இவைகளை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். மேலும் ஏதும் தேவை பட்டாலும் வெட்கப்படாமல் கேளுங்கள் என்றார். "என்னுடைய சகாக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவேண்டும்,

நான் ஆதம் மலையைப் பார்க்கவேண்டும்" என்றேன். ஆனால் என் சகாக்கள் நான் இல்லாமல் மேற்கொண்டு பயணம் செய்யமாட்டோம், அது ஒருவருடம் தாமதமானாலும் சரி என கண்டிப்புடன் சொல்லிவிட்டனர். அவர்களை பாதுகாப்பது என் பொறுப்பு, தவிர உங்களை பாதுகாப்புடன் ஆதம் மலைக்கு அனுப்பிவைக்கிறேன் என்றார் மன்னர். அவர் சொன்னது போல் எனக்குப் பல்லக்கும் அதை தூக்க நான்கு பேரும்,

வருடம் ஒருமுறை புனிதப் பயணம் மேற்கொள்ளும் நான்கு யோகிகளும், ஐந்து பிராமணர்களும், பத்து அதிகாரிகளும், பதினைந்து சேவகருடன் உணவுப் பொருட்களுமாய் அனுப்பிவைத்தார்.ஆதம் மலையை,முஸ்லிம்கள் பாவா ஆதம்(அலை) அவர்களின் பாதச்சுவடு என்றும்,. நாங்கள் மூங்கில்கள் நிறைந்த ‘மனார் மந்தாலி’ பின் பந்தர் சலாவாத்'தைக்   கடந்தபின் நிறைய சிறு ஓடைகள் குறுக்கிட்டன.

அங்கு கூட்டங்கூட்டமாக காட்டு யானைகளைப் பார்த்தோம். அவை அவ்வழியாக நடந்து செல்வோரை ஒன்றும் செய்வதில்லை. விசாரித்தவகையில் ஷெய்கு அபு அப்துல்லாஹ் என்ற சூஃபி முதன் முதலில் இப்பாதை வழியாக நடந்துச் சென்றார் அதுமுதல் யானைகள் யாரையும் எதும் செய்வதில்லை, கள்வர்கள் பயமும் இல்லை என்றனர். அதன் பின் குனாகர்(குறுநகல்) என்ற இடத்தை அடைந்தோம். இது பேரரசனின் தலைநகர், இங்கு இரண்டு மலைகளுக்கிடையில் செல்லும் பாதை வழியாகச் சென்றால் பெரிய ஏரி வருகிறது, அதற்கு ரூபி ஏரி என்று பெயர். இங்கு நிறைய சிகப்புக் கல்(ரூபி) கிடைக்கிறது. ஊருக்கு வெளியே ஷிராஜை(ஈரான்) சேர்ந்த ஷெய்கு உதுமான் பள்ளிவாசல் இருக்கிறது.

இந்நகரின் அரசரிடம் வெள்ளை நிற பட்டத்து யானை இருப்பதைப் பார்த்தேன்; உலகில் வேறெங்கும் வெள்ளை யானையைப் பார்த்ததில்லை. சிலோனில் பல பாகங்களில் ரூபி கிடைக்கிறது, சில இடங்களில் சிகப்புக் கல், சில இடங்களில் மஞ்சள் கல், சில இடங்களில் நீலம் கிடைக்கின்றது. இவைகளைக் கடந்து ஓரிடம் வந்ததும் அங்கு நிறைய குரோட்டன்ஸ் செடிகள் வரிசை வரிசையாக இருந்தன. அங்கே பறக்கும் அட்டைகளைக் கண்டேன். அவை பறந்து வந்து மனிதனின் மேல் ஒட்டி இரத்தம் குடிக்கின்றன, ஆகவே அவ்வழியாகச் செல்பவர்கள் கையில் எலுமிச்சைப் பழத்தை வைத்துக்கொள்கின்றனர். அட்டை ஒட்டியவுடன் எலுமிச்சையை அதன்மீது பிழிந்து ஊற்றினால் உடனே கீழே விழுந்துவிடும்.

ஒன்பது நாட்கள் பயணத்துக்குப் பின் கடலிலிருந்து பார்த்த அந்த  ஆதம் மலையை அடைந்தோம். இப்போது மேகக்கூட்டம் கீழே தெரிந்தது. எங்கு நோக்கினும் பச்சை, பசுமை நிறைந்த அம்மலையில் விதவிதமான பூக்கள் பல்வேறு நிறங்களில் பூத்திருப்பதைப் பார்க்க ரம்மியமாக இருந்தது. அங்கு மலர்ந்திருந்த ரோஜா மலர் உள்ளங்கையை விட பெரிதாக இருந்தது. பாதம் இருக்கும் இடத்தை அடைய இரண்டு பாதைகள் இருந்தன. ஒன்று பாபா பாதை மற்றொன்று அம்மா(ஏவாள்) பாதை. பாபா பாதை செங்குத்தாக இருந்தது, மேலே செல்வது கடினம். அம்மா(ஏவாள்) பாதை அப்படியல்ல; செல்வது சுலபமானது. பாபா பாதை செங்குத்தாக இருந்ததால் முன் வந்தவர்கள் சில இடங்களில் படிக்கட்டுக்கள் செதுக்கி இரும்பினால் கைப்பிடியும் வைத்துள்ளனர்.

பத்து இடங்களில் சங்கிலிகள் பொருத்தி வைத்துள்ளனர், அவற்றை பிடித்துக்கொண்டு ஏற வேண்டும். பத்தாவது சங்கிலிக்குபின் செயற்கை குகை ஒன்று இருக்கிறது அதற்கு 'கிதர் குகை என்று பெயர். அங்கு ஒரு சுனை உள்ளது அதில் நிறைய மீன்கள் இருக்கின்றன, அவற்றை யாரும் பிடிப்பதில்லை. இங்கிருந்து இரண்டு மைல் தூரம் போனால் புனிதமிக்க பாவா ஆதமுடைய பாதச்சுவடு இருக்கிறது. கருப்பு பாறையில் பதியப்பட்டு ஏழு கெஜம் நீளம் உள்ளதாக இருக்கிறது. பாதத்தில் ஏழு குழிகள் இருக்கின்றன இவற்றில் ஹிந்துக்கள் தங்கம், ரத்தினக் கற்கள், ஆபரணங்களை காணிக்கையாக வைப்பார்களாம்.கிதர் குகையில் மூன்று நாட்கள் தங்கி தினமும் காலை மாலை பாதத்தை தரிசித்து வருவது அம்மக்களின் பழக்கம். அவர்களை நானும் பின்பற்றினேன். நான்காம் நாள் நாங்கள் அம்மா(ஹவ்வா) பாதை வழியாகத் திரும்பினோம்.

வரும் வழியில் பல மலை கிராமங்களில் தங்கித்தங்கி வந்தோம். மலையடிவாரத்தில் ஓர் பழமைவாய்ந்த மரம் யாரும் அடையமுடியாத இடத்தில் உள்ளது அதிலிருந்து ஒரு இலைகூட உதிர்வதில்லை அப்படி உதிர்ந்ததைப் பார்த்தவர் யாரையும் நான் சந்திக்கவுமில்லை. ஆனால் அங்கு நிறைய யோகிகள் அந்த மரத்தின் இலைக்காகக் காத்திருப்பதைக் கண்டேன். ஒரு கட்டுக்கதை சொல்லப்படுகிறது அந்த இலையைச் சாப்பிட்டால் முதுமை அடைந்தவன்கூட இளமையாகி விடுவானாம்.  அங்கும் ஒரு ஏரி உள்ளது, அதிலும் ரூபி கற்கள் கிடைக்கின்றன. அதன் பின் தீனவாரை(தெவந்துறை) அடைந்தோம்.பின் அங்கிருந்து (காலி -காளெ) சென்று பின் கலன்ம்பு(கொழும்பு) சென்றோம். கலன்ம்பு பெரிய நகரம், அங்கு ஜலஸ்தி என்ற கப்பலின் தலைவரிடம் தங்கியிருந்தோம். அவரிடம் ஐநூறு அபிசீனியர்கள் இருக்கக் கண்டேன். அங்கு மூன்று நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் பத்தாலா வந்தடைந்தோம். அங்கு கேப்டன் இபுறாஹிம் எனக்காக காத்துக்கொண்டிருந்தார்.

 எமக்கான தனித்துவ வரலாற்றுச் சான்றை ஒரு சில வார்த்தைகள்,வரலாறுகள் மூலம் சுருங்கிக் கூற முடிக்க இயலாத ஒன்று,இன்று எம் வரலாறும்,பூர்வீகமும் மறைத்து,குறைத்து காண்பிக்கப்படுகின்றன ஆக எமது தனித்துவத்தையும் மறைக்கப்படுகின்ற வரலாறுகளையும் படித்து விட்டு மாத்திரம் மூடி வைக்காமல் முழு உலகுக்கும் நிரூபிக்க வேண்டிய ஒரு இறுக்கமான காலப்பகிதியில் இருக்கின்றோம்.

ஆக,சமகால பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்குமுகமாகவும்,மாற்று மதத்தினர்களுக்கும் இது பற்றி நளினமான,ஐக்கியமான முறையிலும் எடுத்துச் சொல்லி ஒரு தாய் குடும்பமாக வாழ எல்லாம் நிறைந்த இறைவன் நல் வழி காட்டட்டும் அவர்களுக்கும்...!

3 comments:

  1. தேவையான விசயத்தைச்சொல்லி இருக்கிறீர்கள் இது போன்றவைகளை தேடிப்படித்து ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து வைத்திருப்பது கட்டாயக்கடமை எனலாம்.

    ReplyDelete
  2. அருமையான ஆக்கம் இதுபோன்ற ஆக்கங்களை மீண்டும் எதிர் பார்க்கிறோ . இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு மற்றும் தியாகஙகளையும் தொடர்ந்து பதிவிடுங்கள் எமது வரலாற்றை நாமும் அறிந்து கொள்ள முடியும் .இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. நல்ல தகவல். மூலம் முக்கியமானது. முஸ்லிம்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது.

    ReplyDelete

Powered by Blogger.