உலகின் முதல் பறக்கும் சைக்கிள்
உலகின் முதல் பறக்கும் சைக்கிளை இங்கிலாந்தை சேர்ந்த 2 வடிவமைப்பாளர்கள் தயாரித்துள்ளனர்.
சாதாரண சைக்கிளுடன், இறகுகள் பொருத்தப்பட்டு இறகுகளில் உள்ள காற்றாடியை சுழல வைக்க இயற்கை எரிசக்தி பயன்படுத்தப்படும் இந்த சைக்கிள், திறந்த வெளியில் இருந்து உயர கிளம்பி 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு லைசென்ஸ் தேவையில்லை.
தேவையான தூரம் பறந்த பின்னர் சைக்கிளில் உள்ள பாரச்சூட்டை மடக்கி விட்டால் ஆர்ப்பாட்டமின்றி தரையில் இறங்கி சாதாரண சைக்கிளாக இது மாறிவிடும்.
சோதனை முறையில் உருவாக்கப்பட்ட இந்த பறக்கும் சைக்கிளின் வடிவமைப்பை வர்த்தக ரீதியாக மேம்படுத்த 1/2 லட்சம் பவுண்டுகள் தேவைப்படும்.
அந்த பணம் கிடைத்ததும் வர்த்தக ரீதியான தயாரிப்பு தொடங்கி விடும் என இந்த பறக்கும் சைக்கிளை வடிவமைத்த ஜான் ஃபோடென் மற்றும் யான்னிக் ரீட் தெரிவித்தனர்.
Post a Comment