இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் அறிக்கை
இலங்கையில் வெளிவருகின்ற மும்மொழிகளிலுமான பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பல்வேறுபட்ட விடயங்களுக்கு எதிராக பொதுமக்களால் 176 முறைப்பாடுகள் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்டுள்ளன. இந்த முறைப்பாடுகளில் அதிகமானவை ஆதாரமற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து பிரசுரிக்கப்பட்ட செய்திகள் மற்றும் தகவல்களுக்கு எதிரானவையாகும் என்று இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் 2012 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் வருடாந்த பொதுக்கூட்டம் அதன் பணிப்பாளர் சபையின் தலைவர் குமார் நடேசனின் தலைமையில் 2013 ஆகஸ்ட 27 ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபன கெட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுகுமார் ரொக்வூட் 2012 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை பற்றிய சுருக்கத்தை சமர்ப்பித்ததோடு அறிக்கையையும் வெளியிட்டு வைத்தார்.
இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவுக்கு கடந்த வருடம் வாசகர்களாகிய பொதுமக்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகள், அவைபற்றிய விபரங்கள், ஆணைக்குழுவின் கடந்தகால செயற்பாடுகள், இலங்கையின் அச்சு ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்கும் செயல்திறன் அதிகரிப்புக்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள் உட்பட பல்வேறுபட்ட தகவல்களை இந்த அறிக்கை உள்ளடக்கியிருக்கின்றது.
இவ்வாறு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் 87 (44%) முறைப்பாடுகள் சிங்கள மொழி மூல பத்திரிகைப் பிரசுரங்களுக்கு எதிரானவையாகவும் 42 (26%) முறைப்பாடுகள் தமிழ் மொழி மூல பத்திரிகைகளுக்கும் 29 (28%) ஆங்கில மொழி மூல பத்திரிகைகளுக்கு எதிரானவையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இம்முறைப்பாடுகளில் 67 முறைப்பாடுகளுக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தீர்வு காணப்பட்டுள்ளன. 45 முறைப்பாடுகள் முறைப்பாட்டாளர்களால் தொடரப்படாதவைகளாக இருப்பதோடு 17 முறைப்பாடுகளுக்கு பத்திரிகைகளின் ஆசிரியர்களது முன்னெடுப்புக்காக விடப்பட்டுள்ளன. அத்துடன் 39 முறைப்பாடுகள் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முறைப்பாட்டு ஒழுங்குவிதிகளுக்கு புறம்பானவைகளாகும். 6 முறைப்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தமையால் அவை ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்படாதவைகளாகும்.
இந்த ஆணைக்குழு முறைப்பாடுகளை ஏற்று அதற்கான தீர்வுகளை வாசகர்களுக்கு வழங்குவதற்கு மேலதிகமாக இந்நாட்டின் ஊடகத்துறையின் மேம்பாட்டிற்கும், ஊடகங்களில் தங்கியுள்ள மக்களின் உரிமைகள் கடமைகளுக்கு ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுப்பதற்காகவும். ஊடகத்துறையினரின் தகைமைகளை மேம்படுத்தி தொழில் மற்றும் ஊடக செயற்பாடுகளின் தராதரத்தை முன்னேற்றுவதற்காகவும் பல நடவடிக்கைகளை தேசிய மட்டத்தில் மேற்கொண்டு வந்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஊடக அறிவை மேம்படுத்தி ஊடகக் கல்விக்கு உதவும் வகையில் பாடசாலை மட்ட அறிவூட்டல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், சர்வதேச மட்டத்தில் தொழில் காரணமாக நடைபெறும் ஆட்கடத்தலைத் தடுப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து எற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு, பாடசாலை ஆசிரியர்கள், கல்விச் சமூகம், சிவில் சமூகம் ஆகியோரை ஊடக செய்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்களின்போது எவ்வாறு அவற்றுக்கு எதிராக ஆணைக்குழுவின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்வத தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள், இலங்கையின் ஊடக சமூகத்தினருக்கும் முப்படையினருக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி ஊடகவியலாளர்களின் பணிகளுக்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகளது முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினருக்கான அறிவூட்டல் நிகழ்ச்சிகள் மற்றும் அவ்வப்போது இலங்கைக்கு விஜயங்களை மேற்கொண்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஊடகத்துறையில் சுயகட்டுப்பாட்டு பொறிமுறையின் முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல்களை நடத்தியமை என்பன கடந்த வருடத்திற்கான செயற்பாடுகளாக வருடாந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் கொழும்பு, கம்பஹா, குருணாகல், அநுராதபுரம், புத்தளம், கண்டி, பதுளை,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஊடக பயிற்சி மற்றும் அறிவூட்டல் நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சிறி ரனசிங்க (இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் தலைவா மற்றும் லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர்) சுந்தர நிஹதமானி டி மெல் (லக்பிம) என்.எம். அமீன் ( தலைவர் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியாபோரம்) ஆகியோர் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களாக மீண்டும் தெரிவாகியுள்ளனர்.
சிறி ரனசிங்க (இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் தலைவா மற்றும் லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர்) சுந்தர நிஹதமானி டி மெல் (லக்பிம) என்.எம். அமீன் ( தலைவர் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியாபோரம்) ஆகியோர் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களாக மீண்டும் தெரிவாகியுள்ளனர்.
திரு குமார் நடேசன் (தலைவர்), சின்ஹ ரட்னதுங்க (பிரதித் தலைவர்) நிமல் வெல்கம (பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம்), மெனிக் டி சில்வா (பத்திரிகை ஆசிரியர் சிங்களம்) சுனில் ஜயசேகர (சுதந்திர ஊடக அமைப்பு) மற்றும் செல்வி சீதா ரஞ்சனி ஆகியோர் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முரண்பாட்டுத் தீர்வுக்குழுவின் உறுப்பினர்களாக பின்வருவோர் கடமையாற்றுகின்றனர்
தலைவர் சாம் விஜேசிங்க (ஓய்வு பெற்ற பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் இலங்கையின் முதல் குறைகேள் அதிகாரி) கலாநிதி தேவநேசன் னேசய்யாஇ திருமதி, ஞானா முனசிங்க (சித்தி திருச்செல்வம் விலகிக் கொண்டதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமனம்; செய்யப்பட்டார்)இ ஜாவிட் யூசுப்இ லுசில் விஜேவர்தனஇ டியோன் சூமன்இ தயா லங்காபுர திருமதி விஜித பெர்ணான்டோ, சிரி ரணசிங்க. ஜயதிலக டி சில்வாஇ வி.தேவராஜா மற்றும் பிரமோட் டி. சில்வா. ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.
ஆணைக்குழுவின் செயலகத்தில் சிங்கள மொழிமூல ஊடகப் பிரிவுக்கு பொறுப்பாக கமல் லியனாரச்சி மற்றும் தமிழ் மொழி மூல ஊடகம் மற்றும் முறைப்பாட்டு பிரிவு மற்றும் முறைப்பாடுகளுக்கு பொறுப்பாக எம்.எஸ். அமீர் ஹூசை ஆகியோர் கடமையாற்றுகின்றனர்.
ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை மற்றும் ஏனைய தகவல்களை அதன்
www.pccsl.lk என்ற இணையத்தளம் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவுடன் தொடர்பு கொள்ள 011 – 5353635 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு மேலும் தகவல்களை அறியலாம்.
Post a Comment