Header Ads



ஜம்இய்யதுல் உலமாவின் வேண்டுகோள்..!

எகிப்து மற்றும் சிரியா போன்ற நாடுகளி;ல் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிரான கண்டனம்.

இன்று முஸ்லிம்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதிலும் குறிப்பாக சிரியா, எகிப்து போன்ற நாடுகளைச் சேர்ந்த எமது முஸ்லிம் சகோதரர்கள் அநியாயக்காரர்களாலும் அவர்களது இராணுவத்தாலும் மனிதாபிமானமற்ற முறையில் கொலைசெய்யப்படுகின்றனர். மேலும் இவர்கள் உலகமே எதிர்க்கும் வண்ணம் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் மிலேச்சத்தனமான முறையில் தாக்கப்படுகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொலைசெய்யப்பட்டும் கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுமுள்ளன. இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கியுள்ள இவ்வாறான கொடூரமான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கனவாகும்.

முஸ்லிம்கள் என்ற வகையில் நாம் அனைவரும் ஒரு உடலுக்கு ஒப்பானவர்கள். ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு ஏற்படும் கஷ்டம், துன்பம் போன்றன மற்ற முஸ்லிம் சகோதரனில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனடிப்படையில் இலங்கையில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் உடலளவில் அவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் எமது பிரார்த்தனை மூலம் அவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். 

எனவே எமது நாட்டிலும் சர்வதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தவிடுபொடியாவதற்கும் முஸ்லிம்களுக்கு மத்தியில் அமைதியும் ஐக்கியமும் நிலவவும் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நம்நாட்டு முஸ்லிம்களை அன்பாய் வேண்டிக்கொள்கிறது. மேலும் முஸ்லிம் ஸ்தாபனங்கள் சேமிக்கும் உபகார முயற்சிகளில் பங்குகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறது.  

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரினது முயற்சிகளையும் அங்கீகரித்து அருள்புரிவானாக.!

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

No comments

Powered by Blogger.