Header Ads



சுத்தமான தண்ணீருக்கான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு - அதிகாரிகளே குற்றவாளிகள்

வெலிவேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு படையினரின் மீது குற்றம் சுமத்த முடியாது அவ்வாறு செயற்படுமாறு உத்தரவிட்ட அதிகாரிகளே குற்றவாளிகள் என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
  
 சுத்தமான தண்ணீரைப் பெற்றுத்தருமாறு வெலிவேரியா பிரதேச மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் நுழைந்த படையினருக்கும் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு படையினரை குற்றம் சுமத்த முடியாது. அவர்களுக்கு அந்த உத்தரவினைப் பிறப்பித்த அதிகாரிகளையே குற்றவாளியாக தண்டிக்க வேண்டும் என்றார். 

அதற்கமைய இந்த சம்பவத்தினை புதிய இராணுவத்தளபதி, பாதுகாப்பு செயலாளர் உட்பட்டவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சில கட்சிகளின் தலைவர்கள் தமது கட்சியை நாசப்படுத்த முனைவதாகவும் எனினும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்தில் இறந்தவர்களின்  எண்ணிக்கை 3ஆக அதிகரித்த நிலையில் பலர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை பாதுகாப்பு செயலர் உட்பட பல அதிகாரிகள் விசாரணைக்காக மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

3 comments:

  1. வெலிவேரியவிற்கு செல்லுமாறு நானே படையினரிடம் கோரிக்கை விடுத்தேன்: ஞானசார தேரர்....முதல்ல இவன விசாரனைக்கு எடுக்க வேண்டும்.
    இந்த விடயம் தமிழ் பத்திரிகைகளில் மட்டும் தான் வந்தது, அநேகமானவகலுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.how can publicity this matter...anyone can help..???

    ReplyDelete
  2. படைத்த இறைவனை வணங்க அனுமதிக்காதவென் எங்க சுத்தமான தண்ணி எங்க தார
    - இப்னு சித்தான்குட்டி ஆலிம் -

    ReplyDelete
  3. Genna sara pampuku mandail kalimann

    ReplyDelete

Powered by Blogger.