வீம்பு
(Tn) நோன்பு பிடிக்காதோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டு அல்ஜீரியாவின் பதற்றம் நிறைந்த வடக்கு பிராந்தியத்தில் பகலுணவு விருந்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
புனித ரமழான் மாதத்தில் நோன்பு பிடிக்காதோர் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை பகலுணவு உண்டு எதிர்ப்பை வெளியிட்டிருப்பது அசாதாரண நிகழ்வு என செய்திகள் கூறுகின்றன. கைலி பிராந்தியத்தில் நோன்பு நேரத்தில் உண்டுகொண்டிருந்த மூன்று இளைஞர்கள் மீது பொலிஸார் விசாரணை நடத்தியதையடுத்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.
“நோன்பை மறுக்கும் தமது நம்பிக்கைகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுவது, சட்ட நடவடிக்கை எடுப்பதை இந்த ஒன்று கூடலில் நாம் கண்டித்திருக்கிறோம்” என உள்ளூர் சைப்லி தன்னாட்சி முன்னணியின் தலைவர் பவ்சிஸ் அய்த் செப்பி குறிப்பிட்டுள்ளார். அல்ஜீரியாவின் பெரும்பான்மை அரபு மக்களில் இருந்து கைப்லி பிராந்தியத்தில் இருக்கும் பெரும்பான்மையினர் மதச் சார்பற்றவர்களாக கருதப்படுகின்றனர். வரலாற்று ரீதியில் இந்த மக்கள் அரசுடன் முரண்பட்டு வந்துள்ளனர்.
Post a Comment