Header Ads



அமைச்சர் பௌஸியின் வேண்டுகோள்

(எம். எஸ். பாஹிம்) ஹஜ் யாத்திரை செல்வதற்காக முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் அனுமதிக் கடிதம் கிடைத்தவர்கள் தவிர்ந்த வேறு எவரும் ஹஜ் முகவர் நிலையங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என ஹஜ் குழுவின் இணைத் தலைவரும் நகர அபிவிருத்தி விவகார சிரேஷ்ட அமைச்சருமான ஏ. எச். எம். பெளசி தெரிவித்தார்.

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 2,240 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 7,566 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதற்காக முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தில் பதிவு செய்திருந்தனர். நேர்முகப் பரீட்சையின் பின்னர் ஹஜ் கடமை நிறைவேற்றத் தகுதி பெற்றவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் அனுமதிக் கடிதம் அனுப்பப் பட்டவர்களுக்கு மட்டுமே இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முகவர் நிலையங்களில் தம்பை பதிவு செய்தவர்களும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக கூறி சிலர் பணம் பெறுவதாக தகவல் கிடைத்துள் ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த விடயத்தில் கலாசாரத் திணைக்களமும் சவூதி அரேபிய அரசும் உறுதியாக உள்ளதாகவும் யாரிடமும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. அவனவன் தன் கடமையை முடிப்பதற்கு தனது சொந்தப்பணத்தில் ஹஜ் கடமையை முடிப்பது ஏன் நேர் முகப்பரீட்சை எதற்கு?

    ReplyDelete

Powered by Blogger.