Header Ads



காசாவுக்கான துருக்கி பிரதமரின் விஜயத்திற்கு எகிப்து இராணுவ நிர்வாகம் அனுமதி மறுப்பு


(Tn) துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டொகனின் ஹமாஸ் ஆளுகைக்கு உட்பட்ட பலஸ்தீனின் காசா விஜயத் திற்கு எகிப்து நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இம்மாத இறுதியில் காசா சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த எர்டொகனை அங்கு நுழைய அனுமதிக்க முடியாது என எகிப்து நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. 

பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சி மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவு போக்கு காரணமாகவே துருக்கி பிரதமருக்கு எகிப்து நிர்வாகம் இவ்வாறு அனுமதி மறுத்திருப்பதாக எகிப்து அரச தரப்பை மேற்கோள்காட்டி அந்நாட்டு ‘யூம் 7’ இணைய செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.

காசாவை முடக்கி வைத்திருக்கும் இஸ்ரேலின் செயலுக்கு எதிராகவே ஏர்டொகன் காசாவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். காசாவில் ஹமாஸ் அமைப்பு 2007ஆம் ஆண்டில் ஜனநாயக முறையில் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்தே இஸ்ரேல், காசாவை முடக்கிவைத் துள்ளது.

எகிப்து அரசின் இந்த முடிவு ஹமாஸ் மீதான பகைமையை வெளிக்காட்டும் செயல் என அந்த அமைப்பின் பேச்சாளர் சமி அபு சுஹ்ரி குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி பிரதமர் எர்டொகன் பதவி கவிழ்க்கப்பட்ட எகிப்து ஜனாதிபதி முர்சியுடன் இணைந்தே காசாவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட் டிருந்ததாக கடந்த மே மாதம் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  காசாவுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு இஸ்ரேலை தவிர்த்து ஒரே வாயிலாக எகிப்தின் ரபா வாயில் மாத்திரமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அந்நூர் கட்சியின் மிகப் பெரும் சாதனை. வாழ்க இஸ்ரேல். இஸ்லாத்தை பேசிப் பேசியே முஸ்லிம் சமுகத்தில் அமெரிக்க இஸ்ரேலின் எஜண்டாவை சவுதி மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு தாயிகள் உருவாக்கப்பட்டு விட்டார்க

    ReplyDelete

Powered by Blogger.