தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் வாழ்வாதார உதவிகள்
(அப்துல்சலாம் யாசீம்)
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இன்று வியாழக்கிழமை தையல் இயந்திரம்,இடியப்ப இயந்திரம், அரைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு,கிழக்கு இணைப்பாளர் ஏ.Nஐசுதாசன் தெரிவித்தார்.
திருகோணமலை பட்டனமும்,சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒன்பது கிராமங்களைச்சேர்ந்த 35 பேருக்கு சுயதொழில் ஊக்குவிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் யுத்தத்தின் போது கணவனை இழந்த பெண்களும் அடங்குவதாகவும் திருமலை பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை ஊக்குவிக்கும் அதிகாரி செல்வி சன்ஐh தெரிவித்தார்.
அத்துடன் அடுத்தமாதம் 107 பேருக்கு ஆடு, கோழியும் கூடும்,வலையும், தோனியும், வழங்க உள்ளதுடன் விவசாய உபகரணங்கள் வழங்க தீர்மாணித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment