காணாமல்போன எமது உறவுகளை கண்டுப்பிடித்து தருமாறு யாழ்ப்பாணத்தில் போராட்டம் (படம்)
(Vi) யுத்த காலத்தின் போது காணாமல் போன தமது உறவுகளை கண்டுப்பிடித்து தருமாறு கோரி காணாமல் போன உறவுகளால் இன்று, 27-08-2013 யாழ்ப்பாணம் நூலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ் நூலகத்துக்கு முன்பாக கூடிய காணாமல் போன தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் உறவுகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட நடத்தப்பட்டது.
இதன்போது அப்பகுதியில் நூற்று கணக்கான பொலிஸார மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்ணீர் மல்க வீதிகளில் புரண்டு கதறி அழுது தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
Post a Comment