ஜனாதிபதி மஹிந்த வீரமாக போராட வேண்டும் - தேசபற்றுள்ள தேசிய இயக்கம்
சூடான், ஸ்லோவாக்கியா நாடுகளில் அமெரிக்கா செயற்பட்டதைப் போன்று இலங்கையில் அமெரிக்காவினால் செயற்பட முடியவில்லை. காரணம் ரஷ்யா, சீனா போன்ற பலம் வாய்ந்த நாடுகள் எப்போதும் இலங்கைக்கு துணை நிற்கின்றன.
நவிபிள்ளை மூலமாக இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த நினைத்தால் அதை ஒரு போதும் செய்ய முடியாது. கடந்த காலங்களில் தருஸ்மன் அறிக்கை மூலமாக இலங்கையின் அதிகாரத்தினை அடக்க முற்பட்டனர் எனினும் அது முடியாமல் போனமையால் நவிபிள்ளை மூலமாக செயற்பட ஆரம்பித்துள்ளனர் என தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.
அரசாங்கம் பாரிய சுமைகளை தாங்கிக் கொண்டு ஒற்றைக் காலில் நின்று கொண்டு போராடுகின்றது. எனவே, இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஏனைய கட்சிகள் குறிப்பாக எதிர்க்கட்சி துணையாக நிற்க வேண்டும். அதை விடுத்து அரசுக்கு எதிராக செயற்படுவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
கடாபி போன்ற மாவீரர்கள் வீர மரணம் அடைய வேண்டும்.ஆனால், அமெரிக்காவின் சூழ்ச்சியினால் அவர் அநாவசியமாக உயிரைத் துறக்க நேர்ந்தது. இதையே அமெரிக்காவும் அவர்களின் கைக்கூலிகளும் இலங்கையில் செய்ய நினைக்கின்றனர்.
எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அமெரிக்கா நவநீதம்பிள்ளையின் சூழ்ச்சியில் சிக்காது வீரமாக போராட வேண்டும் என்றார்.
Post a Comment