Header Ads



நிந்தவூரில் இடம்பெற்ற சிநேகபூர்வ உதைபந்து போட்டி


(சுலைமான் றாபி)

நிந்தவூர் சோண்டேர்ஸ்  விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்த சிநேகபூர்வ  உதைபந்து போட்டி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. மின்னொளியில் இடம்பெற்ற இப்போட்டியில் நிந்தவூர் சோண்டேர்ஸ் மற்றும் அக்கரைப்பற்று அல் குரைஸ் அணிகள் மோதின. போட்டி ஆரம்பித்த முதல் நிமிடமே சூடு பிடித்தது.இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இரண்டு அணிகளுக்கிடயிலும் பந்து பரிமாற்றம் சரிசமனாக காணப்பட்டது. போட்டியின் முதலாவது பாதி நேர ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் சோண்டேர்ஸ்  அணியின் செல்லமாக அழைக்கப்படும் "மல்லி" என்ற வீரர் அபார கோள் ஒன்றினைப் பதிவு செய்தார். இதன் பிறகு இன்னும் போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்தது. இதேவேளை அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் குழுமியிருக்க இரண்டு அணிக்கும் தங்கள் தங்கள் கழக ஆதரவாளர்கள் உற்சாக ஆதரவினை வழங்கினர். 

இதேவேளை போட்டி முதலாவது  பாதி நேர ஆட்டத்திற்கு  இடைநிறுத்தப்பட்ட போது  சோண்டேர்ஸ்  அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் இருந்தது. இதேவேளை சோண்டேர்ஸ்  அணிக்கே கூடுதல் வெற்றி வாய்ப்புக்கள் காணப்பட்டாலும், சோண்டேர்ஸ்  அணி வீரர் ஒருவருக்கு மஞ்சள் நிறை அட்டை காண்பிக்கப்பட்டது.  இதேவேளை அதிக கோள்கள் நிந்தவூர் சோண்டேர்ஸ் அணியினரால் தவறவிடப்பட்டிருந்தது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும். மேலும் அக்கரைப்பற்று அல் குரைஸ் அணியினரும் கொல்களைப்பெற தவறியிருந்தனர். மேலும் இந்த ஆட்டத்தில் இரண்டு அணிக்கும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இவ்விரண்டு முறை KORNER KIK  வாய்ப்பு வழங்கப்பட போதும் அதனை இரண்டு அணிகளும் பயன் படுத்த தவறியிருந்தார்கள். இதேவேளை போட்டியில் இரண்டாவது பாதி ஆட்டம் நிறைவடைய ஓரிரு நிமிடங்கள் எஞ்சியிருந்த வேளையில் அக்கரைப்பற்று அல் குரைஸ் அணி சார்பாக அஸ்வர் எனும் வீரர் கோள் ஒன்றினைப்பதிவு செய்தார். இதனால் போட்டி விறுவிறுப்பாக அமைந்து இறுதியில் 1-1 என்ற அடிப்படையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்த போட்டியில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபைத்தவிசாளர் MAM தாஹிர், பிரதேச சபையின் எதிர்க் கட்சித்தலைவர்  YL சுலைமா லெவ்வை, முன்னாள் உதைப்பந்தாட்ட சிரேஷ்ட வீரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். இதேவேளை கடந்த 08.07.2013ம் திகதி  மின்னொளியில் சோண்டேர்ஸ்  விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நிந்தவூர் சோண்டேர்ஸ் அணி 06 - 00 என்ற கோள் கணக்கில் அக்கரைப்பற்று லவன் AKP  அணிய வீழ்த்தி சம்பியனானது குறிப்பிடத்தக்கதாகும். 

No comments

Powered by Blogger.