Header Ads



பொருட்களுக்கு இலட்சினையிடும் (சீல்வைத்தல்) நடவடிக்கை


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனைப் பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களின் நன்மை கருதி அளவை நிறுவைப் பொருட்களுக்கு இலட்சினையிடும் (சீல்வைத்தல்) நடவடிக்கைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

அம்பாரை மாவட்டசெயலகம் விலைமதிப்புத்திணைக்களம் ஏற்பாட்டில் கல்முனைப்பிரதேசசெயலகத்தில் நடைபெற்றுவரும் இந்நடவடிக்கையில் இப்பிரதேசத்திருள்ள வர்த்தகர்கள் தத்தமது வர்த்தக நிலையங்களில் பாவிக்கும் அளவை நிறுவைப்பொருட்களுக்கு இலட்சினையிட்டுப் புதுப்பித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளதுடன் வருடா வருடம் நடைபெற்றுவரும் இந்நடவடிக்கையின்முலம் அளவை நிறுவைப்பொருட்களுக்கு இலட்சினையிட்டுக் கொள்ளாதவர்களுக்கெதிராக சட்ட சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் விலைமதிப்புத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.