Header Ads



பேஸ்புக் காதல் - மாணவி கடத்தப்பட்டு, நிர்வாண படமெடுப்பு - மொரட்டுவயில் சம்பவம்

(Vi) மாணவியொருவரைக் கடத்திச் சென்று படமெடுத்த நபரொருவர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர்  பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவியை(22) கடத்திச் சென்றுள்ளார்.

மேலும் அவரை பலவந்தமாக நிர்வாணப்படுத்தி தனது கையடக்கத்தொலைபேசியில் படமெடுத்துள்ளார். குறித்த நபர் மொறட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவரைக் கைதுசெய்த பொலிஸார் அவரது கையடக்கத்தொலைபேசியையும் கைப்பற்றியுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து இது பேஸ்புக்கிலிருந்து ஆரம்பித்த காதல் தொடர்பு எனத் தெரியவந்துள்ளதுடன் குறித்த நபர் ஏற்கனவே திருமணமாணவரெனவும் அவருக்கு குழந்தை ஒன்று இருப்பதும் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.