தயாசிறியை விரட்டிய சந்திரிக்கா, நட்பு பாராட்டும் பவித்திரா
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்த தயாசிறி ஜயசேகரவை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவே ஐக்கிய தேசியக்கட்சிக்கு விரட்டியதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
குருணாகல் ஹெட்டிபொல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தயாசிறி என்பவர் எனது தம்பியை போன்றவர். எமக்கிடையிலான நட்பு மிக பழமையானது. அவர் ஐக்கிய தேசியக்கட்சிக்கு மட்டும் உரித்தானவர் அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் உரித்தானவர்.
இதனால் தற்பொழுது அவர் எம் அனைவரும் சொந்தமானவர். தயாசிறியை ஸ்ரீலங்கா சுத்நதிரக்கட்சியில் இருந்து விரட்டியது முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா.
அப்போது ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்டார். தயாசிறி அப்போது அவரது செயலாளர். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அமைப்பின் செயலாளராகவும் இருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஒரு கூட்டத்தில் தயாசிறியை கட்சி விட்டு விரட்டும் படியாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் அதிருப்தியடைந்த அவர் அன்று ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்டார் என்றார்.
Post a Comment